24 special

சைனா ஐட்டம்னு நிரூபிச்சிருச்சே ஒன்னு சாதா பிராடு.. இன்னொன்னு உலக பிராடு புலம்பும் நாடு

SHEHBAZSHARIF,XIJINPING
SHEHBAZSHARIF,XIJINPING

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டு சேர்ந்து தயாரித்த JF-17 தண்டர் போர் விமானங்களை நம்பி வாங்கிய நைஜீரியா, இப்போது "தெரியாம வாங்கி மாட்டிக்கிட்டோமே" என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறது. சோற்றுக்கே வழி இல்லாத உங்களுக்கு எல்லாம் போர் விமானம் தயாரிப்பு ஒரு கேடா எனச் சீனாவையும் பாகிஸ்தானையும் உலக நாடுகளின் முன்னிலையில் நைஜீரியா பகிரங்கமாகக் கலாய்த்து வருகிறது.


கடந்த 2021-22 காலகட்டத்தில் நைஜீரிய விமானப்படை ஆசையாக வாங்கிய மூன்று JF-17 தண்டர் விமானங்கள், இன்று அந்நாட்டிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அங்கிருந்து கசிந்துள்ள அதிர்ச்சிகரமான தகவலின்படி, வாங்கிய மூன்று விமானங்களில் தற்போது ஒரே ஒரு விமானம் மட்டும்தான் ஓரளவுக்குப் பறக்கும் நிலையில் உள்ளது. மற்ற இரண்டு விமானங்களும் பழுதடைந்து குப்பையாகக் கிடப்பதால், அவற்றின் பாகங்களைக் கழற்றி, இருக்கும் அந்த ஒரு விமானத்தில் பொருத்தி எப்படியோ 'அட்ஜஸ்ட்' செய்து ஓட்டி வருகின்றனர். இதைப் பார்த்த நைஜீரிய மக்கள், இது போர் விமானம் இல்லை, சிறுவர்கள் விளையாடும் "பொம்மை விமானம்" என்று கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள KLJ-7 ரேடார் தொழில்நுட்பம் மிகவும் தரம் தாழ்ந்தது என்றும், குறிப்பாக ஈரப்பதம் உள்ள காலநிலைகளில் இது சுத்தமாக வேலை செய்வதில்லை என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, விமானத்தின் இறக்கைகள் இணையும் பகுதி மற்றும் ஏர்ஃபிரேமில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், எப்போது கீழே விழும் என்ற அச்சத்திலேயே விமானிகள் உள்ளனர். அமெரிக்கத் தயாரிப்பு விமானங்களுடன் இணைந்து செயல்பட முடியாமல் இந்த சீனத் தயாரிப்புகள் தனிமைப்பட்டு நிற்கின்றன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் RD-93 என்ஜின்களைப் பராமரிப்பது அதைவிடப் பெரும் கொடுமையாக உள்ளது. ஒரு சிறிய பாகம் தேவைப்பட்டால் கூட, அது வந்து சேர 6 முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே மலேசியா, மியான்மர் போன்ற நாடுகள் இந்த JF-17 விமானங்களைப் பற்றி இதே போன்ற புகார்களைத் தெரிவித்து, தங்கள் விமானங்களைத் தரைதட்டி வைத்துள்ளன. சீனா தனது விளம்பர பலத்தால் இந்த விமானங்களை மற்ற நாடுகளுக்குத் தலையில் கட்டினாலும், அதன் சொந்த நாட்டு விமானப்படை ஏன் இந்த JF-17 விமானங்களை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்ற ரகசியம் இப்போதுதான் உலக நாடுகளுக்குப் புரியத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஆயுதங்கள் போர்க்களத்தில் செயல்படும் வீரன் அல்ல, அவை வெறும் "காகிதப் புலிகள்" என்பது நைஜீரியாவின் இந்த கசப்பான அனுபவம் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.