நேற்று ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமே பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் உண்டாக்கி இருக்கும் நிலையில் தற்போது முன்னாள் இராணுவ வீரர் வீட்டிற்குள் கவுன்சிலர் தலைமையிலான கும்பல் புகுந்து அடித்து நொறுக்கும் cctv காட்சிகள் வெளியாகி தமிழக மக்களை அதிர்ச்சியில் உரைய செய்து இருக்கிறது.கடலூர் மஞ்சகுப்பம் தனலட்சுமி நகரில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் அருள் என்பவர் தன்னுடைய வீட்டை சுற்றி 12 சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் சண்டையிட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது போலீசில் புகார் அளிப்பதுடன் கேமராவில் எடுக்கப்பட்ட அவர்களது படங்களை பேனராக அடித்து, தேடப்படும் குற்றவாளிகள் என்றும் குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் எனவும் சித்தரித்து தெருவில் ஒட்டியதாகவும் கூறப்படுகின்றது.இதனால் அருளுக்கும் அவரது அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கும் இடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பிரச்சனை இருந்து வருகின்றது.
சிசிடிவி கேமராக்களை அகற்றக்கோரி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், திமுக கவுன்சிலர் பிரசன்னகுமார் அறிவுறுத்தலின் பேரில் ஒரு கேமராவை மாநகராட்சி அதிகாரிகள் வந்து அகற்றிச்சென்றதாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கவுன்சிலர் பிரசன்னகுமார் தலைமையில் அக்கம்பக்கத்து வீட்டார், அவரது வீட்டுக்குள் புகுந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்புகைப்படங்களை வைப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அருள், தான் முன்பு போலீசில் கொடுத்த புகாருக்கான சி.எஸ்.ஆர் நகலை அவர்களிடம் வழங்கினார்
அவரது பதில் திருப்தி அளிக்காததால் ஒரு கேமராவை பறித்து வாசலில் போட்டு உடைத்தனர்அதன் தொடர்ச்சியாக வீட்டின் சுவரில் பொறுத்தப்பட்ட காமிராக்கள் அனைத்தையும் இணைப்பை துண்டித்து ஒருவர் உடைத்து வீசினார்தகவல் அறிந்து விரைந்து வந்த உதவி ஆய்வாளர் ஒருவர், கவுன்சிலர் பிரசன்னகுமாரிடம் எப்படி வீடு புகுந்து தாக்குதல் நடத்தலாம்? எனக்கேட்டு சத்தம் போட்டார்.முன்னாள் ராணுவ வீரர் வீட்டுக்கு எதிரில் கூடியிருந்தவர்களை போலீசார் சத்தம் போட்டு கலைந்து போகச் சொன்னபோது, இளைஞர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசினார்
சிசிடிவி கேமராவை தெருவில் உள்ள மற்ற வீடுகளை கண்காணிக்கும் விதமாக அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டிய நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அவை எந்த வீட்டையும் குறிப்பிட்டு வைக்கப்படாமல், மொத்தமாக தெருவை பார்த்து அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் ? யார்? என்று குறிப்பிட்டு புகார் அளிக்கும்படி தெரிவித்தனர்
முன்னாள் ராணுவ வீரர் அருள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் புதுநகர் போலீசார் கவுன்சிலர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் தமிழகத்தில் முகநூலில் உதயநிதியை விமர்சனம் செய்து பதிவு போட்டார் என்பதற்காக பாஜகவினரை வலைத்து வளைத்து கைது செய்யும் தமிழக காவல்துறை உண்மையாக சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்கும் நபர்களை சுதந்திரமாக விட்ட காரணத்தால்தான் தற்போது மிக பெரிய அளவில் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும், முன்னாள் இராணுவ வீரர் என்று கூட பார்க்காமல் வீட்டின் உள்ளே நுழைந்து சூரையாடிய சம்பவமும் தமிழகத்தில் அரங்கேருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.