24 special

ALH துருவ் மார்க் III..! உளவுக்கு கெட்டிக்காரன்..?


புதுதில்லி : ஆத்மநிர்பார் பரத் திட்டத்தின் படி முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான ALH துருவ் மார்க் IIIன் மூன்றாவது படைப்பிரிவு குஜராத் மாநிலம் போர்பந்தரில் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியகடலோர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ALH துருவ் மார்க் IIIஹெலிகாப்டரை ஐசிஜி இயக்குனரான ஜெனரல் விஎஸ் பதானியா இயக்கினார்.


கடலோர காவல்படை அதிகாரிகள் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் ALH துருவ் மார்க் III கனரக இயந்திர துப்பாக்கிகளை கொண்டுள்ளது. இதனால் உளவு மற்றும் தாக்குதல் என்ற இரு இலக்கையும் அடையமுடியும்என தெரிவித்தனர். மேலும் இது கடலோரக்காவல்படையின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது. 

மேலும் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் பெங்களூருவை சேர்ந்த HAL நிறுவனத்தால் ALH துருவ் மார்க் IIIஉருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் HAL தயாரிப்பில் இரண்டாவது ALH துருவ் மார்க் III படைப்பிரிவு கேரளாவில் பணியமரத்தப்பட்டது. இந்த இலகுரக ALH துருவ் மார்க் III ஹெலிகாப்டர்களில் நான்கு கொச்சி கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ALH துருவ் மார்க் IIIபற்றி HAL தெரிவிக்கையில் " இந்த ALH துருவ் மார்க் III உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரட்டை இன்ஜின். இது புதிய தலைமுறைக்கான ஹெலிகாப்டர். பொருத்தமான பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ALH துருவ் மார்க் IIIமின்னணு போர்த்தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. 

தாக்குதல் நெருங்கியகாற்று ஆயுதமாறுபாடுகள் ஆயுத அமைப்புகள் மற்றும் மிஷன் சென்சார்களை இந்த துருவ் கொண்டுள்ளது. இதில் ஏர் டு ஏர் ஏவுகணைகள் ரெட் ஜாமர் மற்றும் தொலைநோக்கு சென்சார் போன்றவை மேலும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது" என HAL அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.