புதுதில்லி : இந்தியாவில் சிறிய ரக ஆயுதங்கள் மாற்று இலகுரக ஆயுதங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. இருந்தாலும் இந்திய எல்லைகளுக்கு அப்பால் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் ஆயிரக்கணக்கான கள்ளத்துப்பாக்கிகளை பாதுகாப்புப்படைகள் ஆண்டுதோறும் கைபற்றிவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக இந்த இலகுரக மற்றும் சிறிய ஆயுதங்கள் கடத்தப்பட்டு பயங்கரவாத அமைப்புக்கள் ஆயுதக்குழுக்களுக்கு கிடைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடுமையாக ஐநாவின் UNPOAவை செயல்படுத்த மேல் முயற்சிகள் தேவை என D&ISA கூடுதல் செயலாளர் சந்தீப் ஆர்யா தெரிவித்துள்ளார். சிறு ஆயத்தங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்கள் மீதான நடவடிக்கை ஹோடர்பாக நடந்த மாநிலங்களின் எட்டாவது இருபதாபடு கூட்டத்தில் சந்தீப் உரையாற்றினார்.
அவர் கூறுகையில் " ஐநாவின் செயல்திட்டத்தை முழுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்க மற்றும் எதிர்த்து போராட பலதரப்பு முயற்சிகள் அவசியமாகிறது. ஆயுதமோதல்களை கட்டுப்படுத்துவதில் உலகிற்கே சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தின் கொடூரத்தை சமாளிப்பதிலும் ஐநாவின் UNPOAவின் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
உறுதியான தேசிய சட்டங்கள் அவற்றின் விதிமுறைகள் ஏற்றுமதி அவற்றின் அமலாக்கம் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலமே ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயத்தில் மாநில அரசுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். அதிக ஆபத்துள்ள இடங்களில் போதிய நடவடிக்கை இல்லாத இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்" என சந்தீப் ஆர்யா தெரிவித்துள்ளார்.