24 special

பச்சை "பச்சையாக" கேட்ட நடிகை கஸ்தூரி.. வாயை மூடி மவுனம் காக்கும் முன் களப்பு..!

Actress kasthuri and senthil
Actress kasthuri and senthil

ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உள்ளாக்கிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது, விருதுநகரில் பெண் ஒருவர் காதல் என்ற பெயரில் ஒருவன் மிரட்டி பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்களுக்கும் இறையாக்கிய கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர் திமுகவை சேர்ந்தவன் என்பதும் இதில் பள்ளி மாணவர்கள் 4 பேர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது, விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

காதலன் என்பதால் அந்தபெண் அவருடன் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாகபழகியுள்ளனர். காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் மொன்னி தெருவை அவரது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகை கஸ்தூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை  இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? என பச்சை பச்சையாக கேட்டுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் பொங்கிய பலர் தற்போது விருதுநகர் பாலியல் விவகாரத்தில் கைது செய்யபட்டது திமுகவினர் என்பதால் வாய் மூடி மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது, தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் முன்களப்பு எனப்படும் முன் கள பத்திரிகையாளர்கள் வாய் மூடி அமைதியாக இருப்பது பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.