24 special

அக்னிபாத் திட்டம்..! எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்..!

kirit somaiya , sonia gandhi
kirit somaiya , sonia gandhi

புதுதில்லி : இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள மற்றும் தேசத்திற்கு பணியாற்ற துடிக்கும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கும் விதத்திலும் அவர்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டும் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்கள் நான்கு வருட பயிற்சியை மேற்கொள்வார்கள்.


மேலும் அவர்களின் தகுதிக்கேற்ப அதற்கிணையான கல்விச்சான்றிதழும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமானப்படை மற்றும் கப்பற்படை அதற்கான இணையதளத்தை துவங்கி ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பிக்க கோரியிருந்தது. இதில் ஆண்கள் பெண்கள் என ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

இந்த திட்டத்தை எதிர்த்து முதலில் போராட்டக்குரலை தொடங்கிவைத்தது காங்கிரஸ். அதை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் அவர்களை பின்தொடர்ந்து மம்தா பானெர்ஜி உட்பட பலர் இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்க்க தொடங்கினர். ஒரு சிலரின் சுயலாபத்துக்காக இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வன்முறை வெடித்தது. 

அதற்க்கு மூளையாக செயல்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் படிப்படியாக போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த அக்னிபாத் திட்டத்தை குறித்து பார்லிமென்டரி கன்சுலேட்டிவ் டிபேன்ஸ் கமிட்டி எதிர்க்கட்சி எம்பிக்களுடன் கலந்துரையாடியது. இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆறு பேர் கொண்ட குழு மெமோரண்டம் தயார் செய்து எம்பிக்கள் கையெழுத்தை கேட்டிருந்தது.

இதில் சுப்ரியா சுலே உட்பட நான்குபேர் கையெழுத்திட்ட நிலையில் காங்கிரசின் மனிஷ் திவாரி கையெழுத்திட மறுத்துவிட்டார்.  மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் " மாறி வரும் இந்த காலமாற்றத்தில் ராணுவத்தில் மாற்றங்கள் சீர்திருத்தத்தங்கள் அவசியமாகிறது. ராணுவத்தில் புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்பதை இந்த திட்டம் எடுத்துரைத்துள்ளது.

இந்த மாற்றத்தை நிச்சயமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும்" என செய்தியாளர்களிடம் திவாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மெமோரண்டத்தில் கையெழுத்திட மறுத்தது குறித்து காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த ஒரு விளக்க அறிக்கையும் கொடுக்கவில்லை.