புதுதில்லி : இந்திய ராணுவத்தின் விமானப்படை தனது திறனை சக்தியை மேம்படுத்தும்விதமாக LCH என அழைக்கப்படும் உள்நாட்டு லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களை இணைத்து வருகிறது. மேலும் உயரமான மலைப்பகுதிகள் பனிமலைகள் போன்ற இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் சீட்டா மற்றும் சேடக் ரக ஹெலிகாப்டர்கள் மாற்றப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
தற்போது ராணுவசேவையில் 190 சீட்டாக்கள் மேட்டரும் சேடக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. முப்பது வருடங்களுக்கு மேலாக சேவையில் இருக்கும் இந்த ஹெலிகாப்டர்களில் 70 சதவிகதம் அவசியம் மாற்றப்படவேண்டியவை ஆகும். போர்திறன் பன்மடங்கு அதிகரித்து வரும் இந்நேரத்தில் வயது முதிர்ந்த இந்த ரக ஹெலிகாப்டர்கள் மாற்றப்படவேண்டும்.
அதற்க்கு இணையாக அல்லது மாற்றாக Ka-226T மற்றும் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள் பணியமரத்தப்பட வேண்டும். அப்போது தான் உளவுத்துறை மற்றும் கண்காணிப்புத்திறன்கள் மேம்படும் என ராணுவ அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL "LUH" ரக ஹெலிகாப்டர்களை உருவாக்கியுள்ளது.
குறைந்த அளவே LUH சோதனை ஓட்டமாக தயாரிக்கப்பட்டு சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1 அன்று இந்திய ராணுவம் தனது முதல் LCH படையை பெங்களூரில் நியமித்துள்ளது. அடுத்த 2023 இறுதிக்குள் இந்த படைப்பிரிவு கிழக்கு கட்டளைக்கு நகரும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 10 எல்.சி.ஹெச் ஹெலிகாப்டர்கள் இருக்கும். மொத்தமாக ஏழு பிரிவுகளை உருவாக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே லே, மிசமாரி மற்றும் ஜோத்புர் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் மூன்று விமானப்படைகளை கொண்டுள்ளது. இந்த படைகள் 145 உள்நாட்டு மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களான ALH ஐ இயக்கிவருகிறது. இந்த எண்ணிக்கையில் ஆயுதமாக செயல்படக்கூடிய 75ருத்ராவும் அடங்கும். இதுதவிர ALH Mk-III ரக ஹெலிகாப்டர்கள் அடுத்த சில மாதங்களில் ராணுவ சேவையில் பங்காற்ற உள்ளன.