இந்திய ராணுவத்தின் புது முயற்சி அக்னிபாத் என்ற இளைஞர்களுக்கான ராணுவ சேர்க்கயை பார்த்து உலக நாடுகள் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன, இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் இந்திய ராணுவம் மற்றும் மூத்த ஆலோசகர்கள் மற்றும் உள்துறை, பிரதமர் அலுவலகம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கு வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்க, ஆனால் ராணுவமோ இப்போதே அக்னி பாத் திட்டத்தில் ராணுவ சேர்க்கைக்கு நாள் குறித்து அறிவிப்பு வெளியிட்டு விட்டது, இந்த சூழலில் அக்னிபாத் திட்டம் குறித்து அரசியல் பார்வையாளர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :-
'அக்னிபாத்' திட்டத்தை என்றோ இந்தியாவில் கொண்டு வந்திருக்க வேண்டும்.வழக்கம் போல,துணிகர முடிவுகளை எடுக்கத் தவறிய காங்கிரஸ் இதிலும் அதையே கடைபிடித்தது.
முதல் ராணுவத்தளபதி ஜென்ட்ரல் கரியப்பா போன்றவர்கள் அன்றே கொடுத்த ஆலோசனைதான் இவை.ஜாதி,பகுதிகளை கடந்து மையப்படுத்தப்பட்ட சேர்க்கை காலத்தின் கட்டாயம்.அங்கே பயிற்சி பெற்ற வீரர்கள் உள்நாட்டில் பல்துறைகளுக்குள் நுழைவதும் எதிர்கால நன்மையே.
புதிய அக்னிவீரர்கள் அப்படித்தான் உருவாகுவார்கள்.அதே போல மொத்த சேர்க்கைகளில் 25% பேரினை பணி நிரந்தரமும் செய்கிறார்கள்.ஆகவே, பழம்பெருமை மிக்க ராஜ்புத்,சீக்கிய,ஜாட் ரெஜின்மென்ட்டுகளும்,கூர்க்கா ரைபிள்ஸ் போன்றவைகளும் நீர்க்கடிக்கப்படப் போவதுமில்லை..
சில குழப்பங்களை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயம்.பீஹார் - உபியில் இந்த பிரச்சனை வேறு விதமாகவும்,ஹரியானா - ராஜஸ்தானில் வேறு விதமாகவும் உள்ளது.எதிர்கட்சிகள் எல்லாவற்றிலும் செய்யும் கேடுகெட்ட அரசியலை இதிலும் செய்கிறது.இதற்கு மத்திய அரசு இடம் கொடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.