24 special

லாட்டரி மார்ட்டின் திமுக பாஜக கூட்டணியா? நடந்தது என்ன?

Stallin,  modi
Stallin, modi

பாரதத்தின்  பெருமை (பாரத் கவுரவ்) எனும் திட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒரு தனியார் ரயில் இயக்கப்பட்டது என படித்திருப்பீர்கள். அது லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமானது எனவும் அதனால் பாஜகவும் டிமிக்காவும் கூட்டணி எனவும் பலரும் எழுதி வருகின்றனர். 


இதிலே உண்மை என்ன? பாரதத்தின் பெருமை எனும் திட்டம் மூலம் சுற்றுலாவை அதிகரிக்க செய்யும் முயற்சி கடந்த ஆங்கில ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முன்பு இருந்த சில பல திட்டங்களின் விரிவாக்கம் தான். 

ரயிலிலே முதலிலே ஒட்டுமொத்த கோச் அதாவது 72 இடங்களையும் ஒருவரே பதிவு செய்து எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது ஆனால் அதுக்கு சில பல சிரமப்படனும். ரயில் நிலையத்துக்கு போய் எழுதிக்கொடுக்கனும் என. 

பின்பு சுற்றுலா வசதி தரும் நிறுவனங்கள் அதாங்க டூர் பேக்கேஜ் ஆப்பரேட்டர்ஸ் , தமிழர்களுக்கு ஆங்கிலத்திலே சொன்னால் தானே புரிகிறது, அவர்களுக்கு ஒட்டுமொத்த ரயிலையே ஒரே பயணத்திற்கு பதிவு செய்யும் வசதி வந்தது.

இதுவும் கொஞ்சம் சிக்கலான நடைமுறை தான். இந்த சிக்கலை எல்லாம் களைந்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பம் செய்து ஒட்டுமொத்தமாக 18 கோச்கள் கொண்ட ரயிலை குத்தகைக்கு குறிப்பிட்டகாலம் இப்போது 2 வருடம் எடுக்கலாம் என கொண்டு வரப்பட்ட திட்டம் தான் பாரத் கவுரவ்

கவனிங்க இது தனியார் ரயில் கிடையாது. ரயில் எல்லாம் ரயில்வே தான் ஓட்டும். ஒட்டுமொத்த ரயில் கோச்களின் பயணிகளை பதிவு செய்வது அவர்களுக்கு உணவு தருவது கவனித்து கொள்வதை மட்டும் ரயில்வே செய்யாமல் டூர் ஆப்பரேட்டர்கள் செய்வார்கள். 

இதற்கு விண்ணப்ப தொகையாக 10 லட்சம் செலுத்தவேண்டும். வருடம் ரயில்வேக்கு 3 கோடி வரை ஈட்டுத்தொகை தரவேண்டும். இது இல்லாமல் ஒரு தடவை ஓட்டினால் இவ்வளவு என தரவேண்டும் என ரயில்வேக்கு நல்ல வருமானம் தரும் திட்டம். டூர் ஆப்பரேட்டர்களுக்கும் நல்ல வருமானம் தரும் திட்டம். அதிக நபர்களை சுற்றுலா, கோவில்கள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

ரயில்வெ அதிகாரிகளிடம் ஒவ்வொரு முறையும் போய் கெஞ்ச வேண்டியதில்லை. இதிலே முதல் முறையாக கோயமுத்தூரிலே இருந்து ஷீரடி வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட்டது. இதை எடுத்தது சவுத் ஸ்டார் ரயில் எனும் நிறுவனம். இது எம் அன்ட் சி ப்ராபர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியின் நிறுவனம். 

இந்த எம் அண்ட் சி ஆனது லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டின் பெயரிலே இருக்கிறது. இதை தவறாக லாட்டரி மார்டின் இன் நிறுவனம் ஆன ப்யூச்சர் கேமிங்க் அண்ட் ஹோட்டல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் என சொன்னார்கள். அது அல்ல. 

முதலிலே இது தனியார் ரயில் இல்லை. தனியார் ரயில் ஓட்டுவதில்லை. இது ஒரு டூர் பேக்கேஜ் திட்டம். ஒவ்வொரு முறையும் ரயிலை பதிவு செய்வதற்கு பதிலாக இரண்டு வருடங்களுக்கு ஒரு ரயிலை பதிவு செய்து சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம். 

பயணிகள் பதிவு, கவனித்து கொள்வது உணவு தருவது, மருத்துவர் இருக்கவேண்டும் என்பது போன்றவை மட்டும் தான் அந்த டூர் ஆப்பரேட்டர் செய்யும் வேலை. மற்றபடி ரயில் ஓட்டுவது, பராமரிப்பது எல்லாம் ரயில்வே தான். அதிலே ஒரு சின்ன மாறுதல் கூட இவர்களால் செய்யமுடியாது. ரயில்வே தான் செய்யவேண்டும். 

ரயில்வேக்கும் வருமானம் வரும், டூர் ஆப்பரேட்டர்களுக்கும் வேலை கிடைக்கும், மக்களும் அவதிப்படாமல் நிம்மதியாக சுற்றுலா செல்லலாம் என கொண்டுவரப்பட்ட திட்டம். இதிலே ஒருவரின் கம்பெனி விண்ணப்பித்து எடுத்து நடத்துகிறது. இதிலே எங்கே முறையற்ற தன்மை எல்லாம் வந்தது? 

கேட்டால் லாட்டரி மார்ட்டின் 100 கோடி கொடுத்ததால் தான் இப்படி நடந்தது என அப்படி எல்லாம் காசு வாங்கி கட்சி நடத்தவேண்டிய இடத்திலே பாஜகவும் இல்லை. அப்படி யாரும் காசும் கொடுக்கவில்லை. 

லாட்டரி மார்டின் மகன் ஜோஸ் மார்டின் வெகுகாலம் முன்பு பாஜகவிலே இணைந்ததாக செய்தி வந்தது இன்னமும் இருக்கிறாரா என தெரியவில்லை. இப்படி இருக்க அடித்து விட்டால் எப்படி? இந்த பாரத் கவுரவ் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கு தனியே ஒரு இணையம் இருக்கீறது அதிலே முழு தகவலும் இருக்கிறது.

பதிவு - ராஜசங்கர் விஸ்வநாதன்