24 special

அஜித் குமார் வெளியானது ஏகப்பட்ட அந்த அதிகாரி வெளியான தகவல்கள் மொத்த கூட்டமும்

SIVAGANGAIAJITHKUMAR,NIKITHA
SIVAGANGAIAJITHKUMAR,NIKITHA

தமிழகத்தை தற்போது புரட்டி போட்டுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரங்கேறியிருக்கும் கோயில் காவலாளி அஜித்குமாரின் காவல் மரணம் தான் இது  தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமுதல், கால் விரல் வரை அஜித்குமாரின் உடலில் இருந்த 40க்கும் அதிகமான காயங்கள், அவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.


உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலை செய்திருக்கிறது என நீதிமன்றமே கூறியுள்ளது. 

இதற்கிடையில் சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கில், அவர்ருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நிகிதா ஏற்கனவே கூறியிருந்த தகவலுக்கும் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அஜித் குமார் ஒருவரை மையப்படுத்தியே நிகிதா புகாரளித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

அஜித் குமார் வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு  மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8 ஆம் தேதி அஜித் குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

2-வது நாளில் அஜித் குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெறற்து. 3-வது நாளான நேற்று அஜித் குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இறுதி கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இளைஞர் அஜித் குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நிகிதா ஏற்கனவே கூறியிருந்த தகவலுக்கும் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, நிகிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தனத் தயாருக்கு வீல் சேர் வழங்க ரூ.500 கேட்டு அஜித் வாக்குவாதம் செய்தார் எனக் கூறியிருந்தார்.

ஆனால் தனது புகாரில், காரை கோவில் வளாகத்தில் நிறுத்திவிட்டு இறங்கும் போது, காரை நான் பார்க்கிங் செய்கிறேன் என்று வலுக்கட்டாயமாக சாவியை வாங்கியதாக புகாரில் நிகிதா கூறியிருக்கிறார். தனது புகார் முழுவதும் அஜித் குமார் ஒருவரை மையப்படுத்தியே நிகிதா புகாரளித்து இருக்கிறார்.அந்த புகாரின் அடிப்படையில்தான், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 27 ஆம் தேதி காலை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், 28 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே, தனிப்படை போலீசார் காவலில் வைத்து அஜித் குமாரை தாக்கியிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையும் எந்த நேரம் பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை. நாள் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரம் குறிப்பிடப்படவில்லை.