
தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி சுயம்பாக முன்னேறியவர் அஜித் குமார். சினிமாவில் அறிமுகமானபோது தொடர் தோல்விகளை சந்தித்த அஜித், பின்னர் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அஜித்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. , படிப்படியாக மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். ஒருகட்டத்தில் தனக்காக இருந்த ரசிகர் மன்றங்களை எல்லாம் அஜித் கலைத்தாலும், அவருக்கான ரசிகர் கூட்டம் என்பது குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
அஜித் மிகசிறந்த தேசியவாதி, அதை எப்போதே நிரூபித்து விட்டார். பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் முதல் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர் இந்த விழாவில் "அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்" என்று நடிகர் அஜித், அன்று கலைஞர் கருணாநிதி முன்னிலையில் பேசிய வீடியோ இன்னமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த மேடையில் பேசிய அத்தனை பேருமே அப்போதைய முதல்வர் கருணாநிதி குறித்து புகழ்ந்து ஜால்ரா அடிக்கும் விதமாக பேசியிருந்தனர் ஏன் விஜய் கூட கருணாநிதிக்கு ஆதரவாக தான் பேசினார்.. ஆனால், நடிகர் அஜித் மட்டும், அதற்கு நேர்மாறாக பேசியிருந்தார். "எங்களுக்கு அரசியல் வேண்டாம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் வேண்டாம்" என்று பேசியிருந்தார். இந்த பேச்சை கேட்ட கருணாநிதியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரஜினிகாந்த் முதல்நபராக எழுந்து நின்று கைத்தட்டினார்.
திமுக எப்போதுமே தனது சொந்த பலத்தில் வெற்றி பெட்ரா சரித்திரமே கிடையாது. சினிமா துறையில் பின்னால் செல்வது, அவர்களை வைத்து விளம்பரம் தேடுவது கூட்டணி கட்சிகளை வைத்து தான் வெற்றி பெற்று வந்தது . இதற்கிடையில் அவர்கள்அரசியலில் பெரிதும் நம்பிய சினிமா துறையே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது. ஆம் விஜய் அரசியலில் குதித்தது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது. உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு விஜயின் அரசியல் பயணம் முற்றுப்புள்ளி வைத்துவிடுமே என்ற பயத்தில் மூழ்கி உள்ளது அறிவாலயம்.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் குறித்து உதயநிதி அவ்வப்போது டிவீட்களை தெறிக்கவிட்டார். அஜித்தை திமுக வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது. அது அனைத்தையும் சுக்குநூறாகி உள்ளார். நடிகர் அஜித் மிக பெரிய தேசப்பற்றாளர் பஹல்காம் தீவிரவாத தாக்குதால் குறித்து பெரும்பாலான தமிழக நடிகர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனால் நடிகர் அஜித் குமார் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிவித்தார்.
அடுத்ததாக பிரதமர் மோடி குறித்து பெருமையாக பேசினார். தற்போது அஜித் சனாதனவாதி என்பதை அடுத்தடுத்த வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளது அறிவாலயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்களுக்கு முன்பு அஜித் குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றிருந்தது.. தற்போது திருப்பதி கோயிலுக்கு அஜித் குமார் சென்றிருக்கிறார்.. அங்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து, ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.. இந்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அஜித் ஒரு தேசப்பற்றாளர், ஆன்மீகவாதி, என நல்ல மனிதன் என்பதை நிரூபித்து வருகிறார்.
