24 special

மாஸ் காட்டிய மோடி படை! படுதோல்வி அடைந்த திமுக மாநாடு திருச்சியில் திணறும் திமுக பரபரக்கும் அரசியல் களம்

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாடு, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.  குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, தொண்டர்கள் கலைந்து சென்றதால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் காலியாகக் கிடந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைவர்கள் பேசும் போதே கூட்டம் குறைந்திருப்பது கட்சித் தலைமையைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


அதேபோல், மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகள் முறையாக நிர்வகிக்கப்படாததால், டன் கணக்கிலான சாப்பாடு குப்பைகளில் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மேலும் மாநாட்டின் மேடை மற்றும் விளம்பரங்களில் உதயநிதிக்குக் கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம், கட்சியின் சீனியர் தளபதிகளில் ஒருவரான நேருவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, மேடையில் உதயநிதியின் வருகையையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ நேரு பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்

இதற்கு காரணம் சட்டசபையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் வராத நிலையில், சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்த இடத்தில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேரு அந்த இருக்கையில் அமரவில்லை. மாறாக, உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான அமைச்சர் அன்பில் மகேஷ் முன்வரிசையில் அமர்ந்தார் இது நேருவுக்கு பிடிக்கவில்லை. 

இதனை தொடர்ந்து திருச்சி திமுக மாநாட்டில்  மேடையில் இருந்த மூத்த தலைவர்களுக்குத் துண்டு அணிவித்து வரவேற்ற நேரு, அருகில் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்றும் கூட அவருக்குத் துண்டு அணிவிக்காமல் கடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களின் உழைப்பால் வளர்ந்த கட்சியில், திடீரென ஒரு தரப்பினர் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதை நேரு போன்ற சீனியர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

மறுபுறம், இந்த உட்கட்சிப் பூசல்களை மிகத் துல்லியமாக கவனித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, திருச்சியில் திமுகவின் பலவீனமான இடங்களை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.. திருச்சியில் கே.என்.நேருவின் பிடி தளர்வது போன்ற பிம்பம் உருவாகியிருப்பது, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

மேலும் வழக்கமாக திருச்சி மாநாடு என்றால் திமுக என்றே பெயர். ஆனால் இந்த முறை பிரதமர் மோடி கலந்து கொண்ட  NDA மாநாட்டு திடலில் பாஜக மற்றும் கூட்டணி தொண்டர்கள் தன்னெழுச்சியாக குவிந்து வருகின்றனர்.திமுக நடத்திய மாநாட்டை பின்னுக்கு தள்ளி, பிரதமர் ' மாநாடு முதலிடம்பிடித்துள்ளது. இது திமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.