
அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அதிபா் டிரம்ப் உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தாா். இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது அமெரிக்க வரிவிதிப்பு என்பது இந்தியாவின் மீது காழ்ப்புணர்ச்சி தான். இந்தியா சர்வதேச நாடுகளுடன் தான் தேவைக்கு, இந்தியா லாபகரமான வர்த்தகத்தைச் செய்கிறது. ஈரானில் துறைமுகங்களைக் கைப்பற்றுகிறது. ரஷ்யா,பிரான்ஸ், இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்குகிறது. ஆர்மேனியா பிலிப்பைன்ஸ்க்கு உள்ளிட்ட 90 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கிறது. உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் பேசுகிறது.
உலகமே கொரானா எனவும் பேரழிவிற்கு பின்னர் தடுமாறி வருகிறது கோவிட் காலத்தில்,உடனடியாக 160 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. சர்வதேச அளவில், இயற்கை பேரிடர் தொடங்கி, கடற்கொள்ளையர் தாக்குதல்கள் வரை எந்த பிரச்சனைக்கும், இப்போதெல்லாம் இந்தியாவே முதலில் உதவிக்கரம் நீட்டுகிறது. இதுபோன்று இந்தியா எல்லா விஷயங்களிலும் நாடு தன்னிறைவுடன் விளங்கி வருகிறது. வெளிநாட்டு நிதியை நம்பியிருக்காத இந்தியா 65 நாடுகளுக்கு மேல் சுமார் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உதவி செய்துள்ளது. அதிலும், விஸ்வாமித்திரனாகப் பிரதமர் மோடி செயல்படுவதால், இந்தியா விஸ்வ குருவாக அனைத்து நாடுகளுக்கும் வழி காட்டுகிறது.
இந்த நிலையில் தான் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு வரியை விதித்தது. இந்த நிலையில் தான் இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் சுதந்திர தின உரையில் என்ன பேசுவார் என உலகமே உற்றுநோக்கி பார்த்து வந்தது.
இதில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிரடி பதில்களை தந்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகள் கற்பனையில் எட்டாத தண்டனை அளித்திருக்கும் நமது துணிச்சலான வீரர்களுக்கு வணக்கத்தை செலுத்துக் கொள்கிறேன்.
எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டுக் கொன்றார்கள். இந்த படுகொலைகளால் முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று இந்தியா தீர்மானித்தது. இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. ஆனால், நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி தாகத்தில் உள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக எனது நாட்டின் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இப்போது, தண்ணீரின் மீதான உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது. அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது.நமது போர் விமானங்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜின்களை உருவாக்க வேண்டும் என்று பொறியியல் வல்லுநர்களையும் இளம் விஞ்ஞானிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.சுயசார்பு இந்தியாவே வளர்ந்த இந்தியாவின் அடிப்படையாகும். ஒருவர் மற்றவரை அதிகம் எதிர்பார்த்திருந்தால் சுதந்திரம் என்பது மங்கத் தொடங்கிவிடும். கடந்த தலைமுறை சுதந்திரத்துக்கு போராடியது, இந்த தலைமுறை சுயசார்ப்புக்கு போராட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான நேரம் வந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்தால் சிறு, குறு தொழில்கள் பயனடையும். சீர்திருத்தத்துக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இவ்வாறு பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் யாருக்கும் அடிபணியமாட்டோம் என தெளிவாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் மேக் இன் இந்தியா, மற்றும் ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் பேசியுள்ளது அமெரிக்காவை ஆட்டம் காணவைத்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தை ஆயுதம் விற்பனை தான் அதிலும் கை வைக்க போகிறது இந்தியா என சூசகமாக தெரிவித்துள்ளார் மோடி. இதனால் அமெரிக்கா அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளதாம்.