
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, கடந்த பதினோரு நாள்களுக்கும் மேலாகத் தலைநகரில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள். இறைவரோடு இரவாக கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ‘தேர்தல் சமயத்தில் எங்களுக்குக் கொடுத்த வாக்கு என்னாச்சு முதல்வரே..?’ என அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் எந்தச் சலனமும் இல்லை. நகராட்சித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் கே.என்.நேரு மொத்தமாக மெளனமாகிவிட்ட நிலையில், வான்டடாக வண்டியில் ஏறி, தன் அடாவடி உடல்மொழியால் வம்பில் சிக்கியிருக்கிறார் சி.எம்.டி.ஏ துறைக்கு அமைச்சரான சேகர் பாபு. போராட்டக்குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் சேகர் பாபு நடந்துகொண்டவிதம், போராட்டக் காரர்களிடமும் பொதுமக்களிடம் கடும் விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது!
“சென்னையில் மட்டுமல்ல, கோவை, மதுரை, திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை எனத் தமிழ்நாடு முழுவதுமே தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் பணியாற்றிவந்த தூய்மைப் பணியாளர்களை, தனியாரின்கீழ் பணியாற்ற வற்புறுத்தி அனுப்புகிறது அரசாங்கம். அப்படித் தனியாரின்கீழ் அவர்கள் பணியாற்றினால், அவர்களின் ஊதியத்தில் மாதம் 5,000 ரூபாய் வரை குறையும். தேர்தல் சமயத்தில், ‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்று வாக்கு கொடுத்த தி.மு.க., தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தவுடன், தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்கிறது. இதற்கு எதிராகத்தான் வீதிக்கு வந்திருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்...” என்கின்றன தொழிலாளர் அமைப்புகள்.
தற்போதைய நிலையில், மாநகராட்சியின்கீழ் பணியாற்றும் அந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 23,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் இனி தனியாரின்கீழ் பணியாற்றும்போது, அவர்களின் சம்பளம் 18,000 ரூபாயாகக் குறையும். அதை எதிர்த்துத்தான், ‘தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று பாதிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்களும் சேர்ந்துகொண்டு ரிப்பன் மாளிகைக்கு முன்பாகப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தால், எழும்பூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, திரு.வி.க.நகர், கொளத்தூர் ஏரியாக்கள் முழுவதுமே குப்பைகள் அகற்றப்படாமல் நாறிக்கிடக்கின்றன. முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே சுகாதாரச் சீர்கேடு உச்சமடைந்திருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவும், மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய போராட்டம், 13 நாள்களைக் கடந்தும் மழையிலும் வெயிலிலும் தொடர்ந்தது
சென்னை மாநகராட்சியில் மட்டுமல்ல... இந்த ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமே தூய்மைப் பணியாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வெடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. தூய்மை பணியாளர்களுக்கான வாக்குறுதி அளித் தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்கள். எதற்கெடுத்தாலும் பொங்கும் திருமா திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் எந்தவித பிரச்சனைக்கும் குரல் கொடுப்பதில்லை, வேங்கைவயல் ஆரம்பித்து தற்போது தூய்மை பணியாளர்கள் வரை நான்கு ஆண்டுகளாக எந்தவித அத்துமீறாமல் அடங்கி ஒடுங்கி போயுள்ளார். இதற்கு காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
அடுத்த முறை விசிகாவில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வலை வீசியுள்ளது திமுக. விசிக கட்சியில் பாதிக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையவும் தயாராக இருக்கிறார்கள். திருமா கூட்டணி யை விட்டு விலகுகிறேன் என கூறினால் போதும் விசிக இரண்டாக உடைந்து திமுகவில் ஐக்கியமாகும். திருமாவும் அடுத்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமாக உள்ளாராம். அமைச்சர் பதவி மீது கண் உள்ளதால் தான் திமுக விசிகவை உடைத்து திமுகவில் இணைப்பதற்கு தயாராகி வருகிறதாம்.