
வரியை போட்டு காலை வாரிய அமெரிக்காவை இந்தியா தற்போது கழற்றிவிட தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளுடன் தனது வர்த்தக உறவை பலப்படுத்த இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது,மேலும் இந்தியாவின் உற்ற நண்பன் ரஸ்யாவும் இந்தியாவிற்கு நேரடி ஆதரவை கொடுத்துள்ளது. மேலும் ரஷ்யாவுடன் அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன்படி ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து தொழில் தொடங்க மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
உலகப் பொருளாதாரத்தில் 32% பங்கைக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகளை குறிவைத்து டிரம்ப் செய்த வேலைகள், கடைசியில் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் 50% வரி, தென்னாப்பிரிக்காவுக்கு 30% வரி, சீனாவுக்கும் வரி+கூடுதல் பொருளாதார தடைகள், ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் என டிரம்ப் வன்மத்தை கக்கியிருந்தார். இந்த வரிக்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதல் முக்கிய காரணம், பிரிக்ஸ் நாடுகள் டாலரை பலவீனப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டுதான். பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள்ளே மேற்கொள்ளும் வணிகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தங்களது சொந்த கரன்சியில் இந்த வர்த்தகம் நடக்கிறது.
உலக பொருளாதாரத்தில் 32% பங்கை கொண்டிருக்கும் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியை மட்டும் பயன்படுத்தினால், அப்புறம் நாங்க அச்சடிக்கிற பச்சை கலர் டாலர் நோட்டுக்கு என்ன மரியாதை? என அமெரிக்கா கோபப்பட்டு இருக்கிறது. இப்படியே போனால் டாலரின் மதிப்பு 32% அளவுக்கு குறைந்துவிடும் என்பதுதான் டிரம்பின் அச்சம். அது உண்மைதான். எனவே பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரியை போட்டு வழிக்கு கொண்டுவரலாம் என திட்டமிட்டிருக்கிறார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 50% வரி இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு போடப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த திட்டத்தை தான் இந்தியா ஏற்கனவே உடைத்துவிட்டது.
அமெரிக்காவின் டாலரை தவிர்ப்பதன் மூலம், டிரம்பின் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும். இந்தியாவுக்கும்-ரஷ்யாவுக்கும் இடையில் தற்போது தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் நடக்கிறது. எனவே இந்த வர்த்தகத்தை பலப்படுத்தி இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. தவிர பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளுடனும் சொந்த கரன்சியில் வர்த்தகத்தில் ஈடுபட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் கீரியும் பாம்புமாக இருந்த சீனா-இந்தியா இப்போது ராசியாகிவிட்டது. இப்படி நடக்கும் என டிரம்புக்கு ஐடியா கொடுத்தவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். மறுபுறம் டிரம்ப் வயிற்றெரிச்சலை கிளப்பும் வகையில் இந்தியா உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறது,
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதீங்க என்று டிரம்ப் எச்சரித்தும் இந்தியா கேட்கவில்லை. எனவே கூடுதல் வரியை இந்தியா மீது போட்டார். நாம் என்ன செய்தோம்? அடுத்த நாளே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தோம். இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போனார். இப்போது ரஷ்யா-இந்தியா உறவு முன்னெப்போதைவிட வலுவடைய தொடங்கியுள்ளது. கடந்த 2021 இல் $3 பில்லியனாக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2024-25 இல் $68 பில்லியனாக ஐந்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
இது எல்லாவற்றிற்கும் உச்சமாக, பிரதமர் நரேந்திர மோடியின் சீனாவுக்கான பயணம் அமைய உள்ளது என்பதுதான். இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்காக சீனாவிற்கு பிரதமர் மோடி போகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனா செல்வது இதுதான் முதல்முறை. இதற்கு காரணம் தலைவன் டிரம்ப்தான்.
ஆக பிரிக்ஸ் நாடுகளை வலுவாக டிரம்ப் கட்டமைக்க தொடங்கியுள்ளார். வரி விஷயம் எல்லாம் வேலைக்கு ஆகாது தலைவா! முழிச்சுக்கோ, பொழச்சிக்கோ என அவரது ஆதரவாளர்கள் டிரம்புக்கு அட்வைஸ் செய்ய தொடங்கியுள்ளனர்.