
உலக அளவில் இந்தியா அமெரிக்க உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மேலும் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.குறிப்பாக இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்கவை அலரச்செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருவது ஆயுதங்கள் விற்பனை,அதில் கை வைத்து விட்டது இந்தியாவும் ரஸ்யாவும் இது தான் அமெரிக்காவால் தாங்கிகொள்ள முடியாமல் இந்தியா மீது வரியை விதித்து வருகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இஸ்ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை நிறுவியது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அயர்ன் டோமில் இருந்து புறப்படும் ஏவுகணைகள் நடுவானில் அழித்துவிடும். இதை அடிப்படையாக வைத்து இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட உள்ளது. என் அறிவித்தார் .
இதற்கிடையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது ஆகாஷ்தீர் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தினோம். தற்போது ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தில் எஸ்400 ஏவுகணைகள், பிரளயம், பிருத்வி, ஏஏடி, ஆகாஷ், எஸ்125 பெசோரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்எஸ்ஏஎம், எஸ்200 ஆகிய ஏவுகணைகள் இணைக்கப்பட்டு உள்ளன. ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் பொருத்தப்பட்ட 107 வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதோடு ரேடார்கள், சென்சார்கள், உளவு செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வான் பரப்பில் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் நுழையும்போது ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தில் பதிவாகும். எதிரியின் ஆயுதம் என்ன?, அதற்கு எந்த வகையான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என்பதை ஆகாஷ்தீர் சில நொடிகளில் கணக்கிட்டு தகவல் அளிக்கும். இதன்படி எதிரிகளின் வான்வழி தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்படும்.
இந்த நிலையில் பிரதமர் மோடி கூறி 10 நாட்களிலே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் சோதனை ஓட்டத்தை "வெற்றிகரமாக" இந்தியா நடத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு என்பது ஒரு உள்நாட்டு தயாரிப்பு. மிக குறுகிய தூரத்துக்குள் அதிவிரைவாகச் சென்று எதிரியின் ஏவுகணைகள் மற்றும் உயர்சக்தி லேசர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கவல்ல பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும்”கிட்டதட்ட இஸரேலின் அயன்டோர்ம், டேவிட் ஸ்லிங் போல மிக வலுவான அமைப்பு இது.
இதே போல், 'ககன்யான்' திட்டத்தில், வேக குறைப்பு அமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனையையும், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு மிக மிக அவசியம். போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை இடைமறித்து தாக்க இந்த அமைப்பு உதவுகிறது. குறிப்பாக ஆயுதங்கள் தயாரிப்பை தீவிரப்படுத்தி விற்பதற்கு அதுவும் டாலர் இல்லாமலும் சொந்த கரன்சியை விற்பனையை தொடங்க உள்ளது இந்தியா. இது அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியுள்ளது.