24 special

பஞ்சாப் விவகாரத்தை சுட்டி காட்டி "எச்சரிக்கை" விடுத்த அமிட்ஷா..!

Eps ops amitsha
Eps ops amitsha

பஞ்சாப் மாநிலத்தில் சிரோண்மணி அகாலிதளம் ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பாஜக தொடர்ந்து ஆதரவு கொடுத்தது மத்திய கேபினட் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக, ஆனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை காரணமாக காட்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது அகாலிதளம் இறுதியில் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தது சிரோன் மணி அகாலிதளம்.


இந்த சூழலில் இதனை சுட்டிக்காட்டி அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் அமிட்ஷா.சமீபத்தில் டில்லியில் பிரதமர் மோடி அமித் ஷா ஆகிய இருவரையும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யும் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை சந்தித்து பேசினார்.

சந்திப்பு குறித்து அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: பிப். 15ம் தேதி முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை 'ரெய்டு' நடத்தியது. வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை ரெய்டு நடத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முறையிட விரும்பினார். அதற்காக பிரதமரை சந்திக்கும்படி தம்பிதுரையிடம் வலியுறுத்தினார்.

தம்பிதுரையும் டில்லியில் மோடி அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் சால்வை அணிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்; நான்கு மாநில சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்கள் இருவரிடமும் வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரம் குறித்தும் தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் தம்பிதுரை விளக்கினார்.

அதையெல்லாம் கேட்ட பின் அதிமுகவிற்கு பாஜக தன்னை காப்பாற்றி கொள்ளவும், அரசியல் செய்யவும் நிர்வாக ரீதியாக காப்பாற்றி கொள்ளவும் தேவை படுகிறது ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் நாங்கள் சுமையாக தெரிகிறோம், 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற அ.தி.மு.க. முடிவு தவறானது.  எங்களின் பலம் என்ன என உங்களுக்கு நகர்புற தேர்தலில் தெரிந்து இருக்கும்.

சிரோண்மணி அகாலி தளமும் தனித்து போட்டியிட கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆனால் இன்று அதன் நிலை படு மோசமாக சென்றுள்ளது இதே நிலைதான் அதிமுகவிற்கு வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் தொடர வேண்டும்; 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

அதற்கு அ.தி.மு.க. இரட்டை தலைமை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களுக்குள் எந்த விரிசலும் இருக்கக் கூடாது. பழனிசாமியின் கணக்குகள் தவறாக சென்று கொண்டே இருக்கின்றன, எங்களை முழுமையாக நம்பி செயல்படுங்கள்' என தம்பிதுரையிடம் அமித் ஷா கோபத்துடன் கூறியுள்ளார்.

இது குறித்து பழனிச்சாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக பாஜகவின் அபிமானத்தை பழனிசாமி இழக்கும் சூழல் உண்டாகியுள்ளது.