24 special

அழுத்தம் திருத்தமாக சொன்ன அமித் ஷா! அழுது புலம்பும் அறிவாலயம்! ஒரே நாளில் மொத்தமாக மாறிய களம்!

Amitsha,mkstalin
Amitsha,mkstalin



மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை விசிட், அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் வியூகங்கோடு, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தின் 'ரூட் மேப்' உடன் அவர் வந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தன் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடமும் உறுதியாக இருக்கிறது.



தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதிலும், பாஜகவை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கவனித்து வருகிறார்.இந்நிலையில் மதுரையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. . இதில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.


கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து, மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றியுள்ள பாஜக, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளது. இதற்காகவே அமித் ஷா நேரடியாகவே களமிறங்கி இருக்கிறாராம். மதுரை வந்து சென்ற  அமித் ஷா, பல்வேறு குறிப்புகளை ஃபைலாக கொண்டு வந்திருந்தார். திமுக மீது மக்கள் மத்தியில் பரவலாக இருக்கக்கூடிய விமர்சனங்கள், அவற்றில் எதை எல்லாம் பாஜக கையில் எடுத்து களமாடலாம் என்ற ரூட் மேப்போடுதான் மதுரைக்கு விசிட் அடித்திருக்கிறாராம் அமித் ஷா.


மத்திய உளவு அமைப்புகள் மூலமாக திமுகவுக்கு எதிராக தனக்கு கிடைத்துள்ள விவரங்களை கையில் வைத்துக்கொண்டு தான் மதுரை வரும் பிளானையே போட்டுள்ளார்  அமித் ஷா மேலும், ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும், தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளதாம். அந்த தகவல்கள் உடனுக்குடன் அமித் ஷா டேபிளுக்குச் சென்றுள்ளன. அதில், 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக பல தகவல்கள் உள்ளதாம்.


இதை எல்லாம் கையில் வைத்துக்கொண்டு, பாஜக தலைகளோடு ஆலோசனை நடத்திய பின்னர் தான், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்  அமித் ஷா.  குறிப்பாக அழுத்தம் திருத்தமாக டாஸ்மாக் ஊழல் குறித்து பேசியுள்ளது திமுக தரப்பில் கிலியை கிளப்பியுள்ளது. அமலாக்கத்துறை  ரைடில்  1000 கோடி முறைகேடு என கூறினார்கள். ஆனால் அமித்ஷா டாஸ்மாக்கில்  35000 கோடி ஊழல் என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்ட்டார்.  இது  தான் கோபாலபுரம் தலையில் இடியை இறக்கியது. 


அதுமட்டுமில்லாமல் அறுபடை வீடுகளில் ஒன்றான ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிப்பாட்டு தலத்தை அரசியல் லாபம், பிரிவினை வாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது. 


இதனால் வரும் ஜூன் 22ம் தேதி முருகன் பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. அதில் பெருந்திரளாக கலந்து கொண்டு வலிமையை காட்ட வேண்டும்'' என்று மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் முறையாக கோவில்கள் குறித்து ஓப்பனாக  அமித் ஷா பேசியது ஆளும் தரப்புக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.  இனி வரும் காலங்களில் அமித்ஷாவின் பிளான்  தீவிரமாக இருக்கும் என்பதால் அறிவாலய வட்டாரங்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.