24 special

உடனே தமிழகம் வரும் அமிட்ஷா ...! காரணம் என்ன..?

Amitsha ,annamalai
Amitsha ,annamalai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் சென்னை வருவதாக இருந்த நிலையில் தற்போது அதற்கு ஒரு நாள் முன்னரே சென்னை வருகிறார், அமிட்ஷா சென்னை வருவதற்கான முக்கிய நோக்கமே பாஜக அதிமுக கூட்டணி குறித்தும் தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக போட்டியிட இருக்கும் தொகுதிகளை இறுதி செய்வதற்கான கெடு முடிவடைந்த நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதால் உடனடியாக அமிட்ஷா சென்னை வருவதாக கூறப்படுகிறது.


தமிழகம் வரும் அமிட்ஷா சென்னை, பள்ளிக்கரணையில் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், வேலூரில் நடைபெறும் பாஜகசாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாளை இரவு சென்னை நட்சத்திர விடுதியில் தங்கும் அமிட்ஷாவை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனராம். குறிப்பாக கடந்த முறை உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்திக்க டெல்லி சென்ற அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி உள்ளிட்ட அனைவரையும் அமிட்ஷாவை நேரில் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த முறை டெல்லி சென்ற அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே குரலுடன் திமுகவை எதிர்க்க அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என தெரிவித்து இருந்தனர் அதே நேரத்தில் அதை ஏற்று கொண்ட அமிட்ஷா கூட்டணி உறுதி அதே நேரத்தில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதை ஜூன் மாதத்திற்குள் உறுதி செய்யவேண்டும் என அமிட்ஷா கூறியதாக TNNEWS24 அப்போதே செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அமிட்ஷா சென்னை வரும் போது கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க அதிமுகவை சேர்ந்தவர்களை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் TTV தினகரன் தரப்பிலும் அமிட்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. op

இதற்கு இடையில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை கடந்த ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை இனி நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை போன்றவற்றை அமிட்ஷாவிற்கு விளக்கும் வண்ணம் பல்வேறு தரவுகளை தயார் செய்து இருப்பதாகவும், கூட்டணி நிலவரம் குறித்து தனியாக பைல் ஒன்றை அண்ணாமலை ரெடி செய்து இருப்பதாகவும் நாளை சென்னை வரும் அமிட்ஷாவிடம் அதனை கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.