24 special

அமித் ஷா வழிபட்டகோவில்... ஓ இத்தனை அருளை இக்கோவில் கொடுக்குமா! வலுவிற்கு வலு சேர்க்கும் பைரவர்!

Byravar
Byravar

ஒரு காரியத்திற்காக நம்முடைய முழு உழைப்பையும் செலுத்தி அந்த காரியத்தை செய்து முடித்து பிறகு அதற்கான பலனை பெரும் வரையில் காத்திருத்தல் அவசியம். அந்த காத்திருப்பின் பொழுது இறை நம்பிக்கை இருந்தால் இறைவரிடமும் நம் உழைப்பிற்கான பலனை கேட்டு பெறலாம். அப்படி நாட்டின் மிக முக்கியமான தேர்தல் அலைகள் அனைத்தும் தற்போது நிறைவு பெற்றதை அடுத்து தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்கும் வகையில் பிரதம நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் புதுக்கோட்டையில் உள்ள திருமயம் சத்யகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து அங்குள்ள கோட்டை பைரவரையும் வழிபட்டு மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு சென்றுள்ளார்.


முன்னதாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியே அமித்ஷா திருமயம் வர இருந்த நிலையில் மழை காரணங்களால் அந்த பயணம் ரத்தானது. அதற்குப் பிறகு தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் முடிந்த தினமான மே 30ஆம் தேதி திருமயம் வருகை புரிந்தார் அமித்ஷா! இப்படி நாட்டின் மிக முக்கிய தலைவர், தமிழகத்தில் புதுக்கோட்டையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏன் வரவேண்டும் அப்படி என்ன இந்த கோவிலுக்கு மகிமை இருக்கிறது என்று பார்க்கும் பொழுது, இமயமலையை விட மிகவும் பழமையான மலை தான் திருமயம் மலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதோடு தமிழகத்தில் உள்ள மிகவும் வலிமையான கோட்டைகளில் திருமயம் கோட்டையும் ஒன்று எனவும் புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோட்டை ராமநாதபுரம் சேதுபதி விஜய ரகுநாத தேவர் எனும் கீழவன் சேதுபதியால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

இந்த கோட்டையின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் திருமால் கோவிலானது ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்க வீற்றிருக்கும் சிவன் சத்யகிரீஸ்வரர் என்றும் பெருமாள் சத்தியமூர்த்தி என்றும் வணங்கப்படுகிறார்கள். இந்தக் கோவிலில் உள்ள அழகிய திருக்குளமும் சிற்பக் கலைகளும் மிகவும் புகழ்பெற்றவை. மேலும் இந்த கோவிலில் உமாபதீஸ்வரர், ராஜராஜேஸ்வரி அம்மன், பைரவர் மற்றும் நவகிரக சன்னதிகளும் உள்ளன அதோடு மூங்கில் காட்டு அரிசியான அம்பிகை வேணுவனேஸ்வரியும் வீற்றிருக்கிறாள். மேலும் இங்கு அருள்பாளிக்கின்ற திருமயம் கோட்டையின் காவல் தெய்வமான பைரவர் தமிழ்நாட்டிலேயே மற்ற எந்த கோவில்களிலும் இல்லாத படி வடக்கு பார்த்தபடி தனி கோயிலில் இங்கு மட்டுமே காட்சி கொடுக்கிறார்.

அதோடு தெற்கே ராமேஸ்வரம் செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு நல்கின்ற கண்கண்ட தெய்வமாகவும் கோட்டை பைரவர் விளங்குகிறார். அதனால் இந்த கோவிலை தாண்டி செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் ஒரு நிமிடம் நின்று பைரவரை வணங்கி விட்டதால் வாகன ஓட்டிகள் செல்வார்கள்! இல்லையென்றால் அந்த பயணம் தடைப்பட்டுவிடும் என்பதும் ஒரு நம்பிக்கை. அதுமட்டுமின்றி திருமயம் கோட்டை பைரவர் கால பைரவர் அம்சம் கொண்டதாலும் விசாக நட்சத்திரக்காரர்களும் எல்லா விதமான சனி தோஷங்களுக்கு ஆளானவர்களும் கோட்டை பைரவரை வணங்கினால் தீரும் என்பதும் நம்பிக்கை. 

அதிலும் குறிப்பாக இந்த பைரவரை வணங்கினால் ஆட்சி அதிகாரம் நிலைக்கும் என்பதும், ஆபத்துகள் விளங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எடுத்துக்காட்டாகவே ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சியை நிலைத்து நிற்க வைத்து காத்து வந்தவர் இந்த பைரவர் தான் என்றும் அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பைரவரையே மத்திய அமைச்சர் அமித்ஷா வழிபட்டு விட்டு சென்றுள்ளார் இதன் மூலம் ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளக்களம் பைரவரின் அருளால் மேலும் வலுப்பெறும் என்று நம்பப்படுகிறது, அதன் காரணமாகத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த கோவிலில் வணங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது..