24 special

டாய்லெட் பேப்பர் உபயோகிப்போரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. மரண கலாய்..!

annamalai
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் முரசொலி இருவருக்கும் இடையே நடைபெற்ற வார்த்தை மோதல்கள் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. 


"1959இல் நேரு பிரதமராக இருந்த போது, அமைச்சராக இல்லாத இந்திரா காந்தியால் கேரள கம்யூனிஸ்ட் நம்பூதிரிபாத் அரசு கலைக்கப்பட்டது" என்று தெளிவாக பேசிய அண்ணாமலையை "கூமுட்டை" என்று சொன்ன முரசொலியை, "டாய்லெட் பேப்பர்" என்றார் அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்.

அவர் சொன்ன பிறகும் மீண்டும் முரசொலி வேறு ஒரு கருத்து மூலம் விமர்சனம் செய்து இருந்தது, அதற்கும்  அண்ணாமலை, "நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா?" "முரசொலியை டாய்லெட் பேப்பரோடு நான் ஒப்பிட்டதால் டாய்லெட் பேப்பர் உபயோகிப்பாளர்கள் பலர் கோபமடைந்திருக்கிறார்கள் அறிகிறேன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்" என்று சொல்லி "டாய்லெட் பேப்பரை விட தரம் குறைந்தது முரசொலி" என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்து அண்ணாமலையிடம் திமுக அமைச்சர்கள் சிக்குவது போன்று தற்போது அக்கட்சியின் நாளிதழ் சிக்கி இருப்பது இணையத்தில் மீம்ஸ் மற்றும் கிண்டலை உண்டாக்கியுள்ளது. முரசொலி முன்பு தேசிய பாஜக கொள்கைகளை விமர்சனம் செய்துவந்த நிலை மாறி இப்போது தமிழக பாஜக தலைவருக்கு பதில் கொடுக்கும் இடத்திற்கு அந்த நாளிதழை அண்ணாமலை கொண்டுவந்து இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மூல பத்திரம் விவகாரத்தில் பாஜக vs திமுக என்று கருத்துக்கள் காணப்பட்ட நிலையில் தற்போது டாய்லெட் பேப்பர் விமர்சனம் மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான விமர்சனமாக மாறியுள்ளது.