24 special

பாஜகவிற்கு இடை தேர்தல் தோல்வி என குதித்தவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி ரிசல்ட்..!

Modi
Modi

இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியடைந்துவிட்டது என தமிழக ஊடகங்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுகிறது.ஆனால் நிஜம் என்ன என்பதை அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் தேடிப் பார்த்தால் புரியும்.பீஹாரில் உள்ள போச்சாஹான் தொகுதி மிகப்பெரிய தனிநபர் ஆராதனை தொகுதியாக இருந்தது.1972 ல் இருந்து ராமாய் ராம்தான் அங்கே வெற்றி பெற்று வருகிறார்.


1990 க்கு பிறகு ராமாய் ராம் எந்த கட்சியில் உள்ளாரோ அதுதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்கிற நிலைக்கு சென்றது..எல்லா ஆட்சிகளிலும் பங்கேற்றார்.ஜனதா - லல்லு - நிதிஷ் என எங்கும் தன் கொடியையே பறக்க வைத்தார் ராமாய் ராய்,2015 ல் சுயேட்சை வேட்பாளரான பேபி குமாரி,மாமதயானை போல வீற்றிருந்த ராமாய் ராமை வீழ்த்தினார்.பேபி குமாரி சுயேட்சையாக இருந்தாலும் அவரை முகேஷ் சஹானி ஆதரித்தார், பாஜக ஆதரித்தது அதில்தான் வென்றார்.

2018 ல் VIP கட்சியை முககேஷ் சஹானி தோற்றுவித்து பாஜகவை ஆதரித்தார்.இது மல்லா,நிஷாத்,கோதி,நோனியா, சாஹ்னி போன்ற சமூகங்களின் அரசியல் அதிகாரத் திரளாக இருந்தது.

2020 ல் பாஜக+நிதிஷ் கூட்டணியில் VIP கட்சியும் இருந்தது.போச்சாஹன் தொகுதியில் முசாபீர் பாஸ்வானை வேட்பாளராக நிறுத்தினார்கள்.அங்கே மீண்டும் போட்டியிட்ட ராமாய் ராம் தோல்வியையே சந்தித்தார்.

இந்த தொகுதியில்தான் முசாபீர் பாஸ்வான் இறந்ததால் தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.இந்த இடைத்தேர்தலுக்கு முன்பே நிஷாத் கட்சியான VIP தலைவர் முகேஷ் சஹானிக்கும்,நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் வந்தது.அது பாஜகவு Vs VIP என்று மாறி கூட்டணி உடைந்துவிட்டது.உடனே,VIP எம்எல்ஏக்களை பாஜக உடைத்து எடுத்தது.

இன்று பீஹாரில் தனிப் பெரும்பான்மை உள்ள கட்சி பாஜகதான்.இப்போது 77 MLAக்களை வைத்துள்ளது அதில் மூவர் VIP யில் வந்து சேர்ந்தவர்கள்.இந்த நிலையில் முசாபர் பாஸ்வான் இறப்பிற்கு பிறகு அவருடைய மகன் VIP கட்சியை விட்டு RJD யில் இணைந்து அமர் பாஸ்வான் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் அதே சமயம் VIP கட்சியானது அங்கே ராமாய் ராம் மகள் கீதாகுமரியை களத்தில் இறக்கியது.ராமாய் ராமை 2021 தேர்தலில் தோற்கடித்தவரின் மகனும், ராமாய் ராமின் மகளும் கட்சி மாறி தங்கள் யுத்தத்தை தொடர்ந்த தேர்தல் இது.

இந்த தேர்தலில் அந்த தொகுதியில் எந்த பலமும் இல்லாத பாஜக,2015 ல் ராமாய் ராமை தோற்கடித்த பேபி குமாரியை களத்தில் இறக்கியது.பேபி குமாரி தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.அங்கே அமர்குமார் பாஸ்வான் Vs கீதா குமாரி Vs பேபிகுமாரி என்ற மும்முனை போட்டியை உருவாக்கியது பாஜக.

தந்தையின் இறப்பினை மையப்படுத்திய தேர்தல் என்பதால் அங்கே அமர்குமார் பாஸ்வான் வென்றிருக்கிறார்.ஆனால் அந்த தொகுதியில் அமைப்பே இல்லாத பாஜக 27% வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது தற்போது..இதில் பாஜகவிற்கு எங்கே தோல்வி?

மஹாராஷ்ட்ரா கோலாப்பூர் வடக்கில் சிவசேனா பலமான கட்சியாக இருந்தது.ராஜேஷ் விநாயக் ஷிர்சாகர் மிகப்பெரிய வேட்பாளரார்.2014 ல் மும்முனை போட்டியில் சிவசேனாதான் வென்றது.காங்கிரஸ் 27% வாக்குகளை வைத்திருந்தது,பாஜக 22% வாக்குகளை பெற்று 3 வது கட்சியாக இருந்தது.

2019 ல் காங்கிரஸ்+NCP VS சிவசேனா+பாஜக கூட்டணிக்கு இடையேயான போட்டியில் 52% வாக்களை பெற்று காங்கிரஸ் கூட்டணி வென்றது.சிவசேனா+பாஜக 44% வாக்குகளை பெற்று தோற்றது.

இந்த நிலையில் காங்கிரஸ் MLA சந்திரகாந்த் ஜாதவ் இறந்துவிட்டதால் அவர் மனைவியை இப்போது வந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ்+சிவசேனா+NCP கூட்டணி முன்னிறுத்தியது.முன்பு பெற்றதை விட 2% வாக்குகள் அதிகம் பெற்று 54% வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ளார்..

ஆனால் 3 வது இடத்தில் வெறும் 22% நிலையில் இருந்த பாஜக இன்று 44% வாக்குகளை பெற்று 2 வது இடத்திற்கு வந்துவிட்டது.முற்று முழுதாக சிவசேனா கரைந்துவிட்டது என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது..ஒரு பொதுத்தேர்தல் வந்தால் மரண அடி வாங்கிவிடும் MVA கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது.

சத்தீஷ்கர் கைராகர் தொகுதியும் காங்கிரஸ் மற்றும் அஜித் ஜோகியினுடைய கோட்டை..அங்கே பாஜக 2008 ல் ஒருமுறை வென்றுள்ளது மற்றபடி காங்கிரஸ்தான் வென்றிருக்கிறது.2018 ல் அஜித் ஜோகி காங்கிரஸ்ஸை விட்டு நீக்கப்பட்டு தனிக்கட்சி துவங்கினார்..அவருடைய JCC(J) கட்சியின் வேட்பாளர் தேவ்விராத் சிங்தான் வென்றார்..

தேவ்விராத் சிங் மறைவால் தற்போது நடந்ந இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் வென்றுள்ளது.ஆனால் பாஜகவின் வாக்குகள் முன்பை விட அதிகரித்துள்ளது அதேசமயம் அஜித் ஜோகியின் கட்சி சுத்தமாக கரைந்து வாக்குகள் காங்கிரஸிற்கு போய்விட்டது.இதிலும் பாஜகவிற்கு என்ன படுதோல்வி?

மேற்கு வங்கத்தின் பாலிகெங்கே தொகுதி 1971 - 2001 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதியாக இருந்துள்ளது.2001 - 2022 வரை திரிணாமுல் காங்கிரஸ் தொகுதியாக உள்ளது.இத்தனை அடக்குமுறை,ஒடுங்குமுறை, வன்முறையை தாண்டி ஒரு இடைத்தேர்தலில் 13% வாக்குகளை அங்கே பாஜக எடுத்ததே சாதனை..

ஒட்டுமொத்தமாக,1.போச்சஹான் (பீஹார்),2.கோலாப்பூர் வடக்கு(மஹா),3.கைராகர் (சதீஷ்கர்),4.பாலிகங்கே (கல்கத்தா) என்ற நான்கு சட்டமன்ற தொகுதியுமே பாஜகவினுடையது இல்லை.அங்கே நடந்த இடைத்தேர்தலில் பாஜக தன் பழைய நிலையை விட பெரிதாக எழுந்துள்ளது,பல கட்சிகளை காணாமல் ஆக்கிவிட்டது.

உண்மையிலேயே பாஜகவிற்கு ஒரு தோல்வி என்றால் மேற்கு வங்கத்தில் அசான்சோல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மட்டுமே.காரணம் 2014 - 2019 இரண்டு முறையும் பாஜக அங்கே எம்பியை கைப்பற்றியது.அது பாபுல் சுப்ரியாவின் வலுவான தொகுதியாக இருந்தது.2021 ல் திரிணாமுல் ஆட்சிக்கு வந்தவுடன் தன் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மம்தா முன்னிலையில் TMC யில் இணைந்தார் பாபுல் சுப்ரியா.

இதனாலே அசான்சோலில் வந்த இடைத்தேர்தலில் சத்ருஹன் சின்ஹா மம்தா சார்பாக வென்றுள்ளார்.ஆனால் அங்கே நடந்த வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகளை மீறி 30% வாக்குகளை பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பெற்றுள்ளார்..ஒரு பொதுத்தேர்தல் வந்தால் இங்கேயும் நிலைமை மாறும்.(சுந்தர் ராஜசோழன் )