தமிழக பாஜக விவகாரம் தான் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் மையப் புள்ளியாக மாறி உள்ளது. அதிலும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறேன் என அறிக்கை கொடுத்ததன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என உள்நோக்கம் இருப்பதாகவும், டெல்லியிடம் அதிமுகவில் மட்டுமல்ல பாஜகவில் இருந்தும் சிலர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் வேறு பல கிசுகிசுக்கள் உலா வந்தன.
ஆனால் அண்ணாமலையை மாற்றுவதற்கு டெல்லி பாஜக தலைமை தயாராக இல்லை எனவும் இரண்டு தினங்கள் அண்ணாமலை அங்கிருந்து குறிப்பாக டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து அடுத்து தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தெளிவாக திட்டமிட்டு கூறி அனுமதி வாங்கி வந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
அது மட்டுமல்லாமல் அண்ணாமலை தற்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் ஓய்வு எடுத்து வருகிறார், ஆறாம் தேதி தொடங்க இருந்த யாத்திரையை கூட இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். தற்பொழுது தமிழக பாஜகவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நோக்கி கள அளவிலான வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் அண்ணாமலைக்கு நடந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது, 'அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் இருந்து மாற்ற வேண்டும் என யார் சொன்னது? யாரிடம் சொன்னார்கள்? ஊடகங்கள் கிளப்பிவிட்ட மிகப்பெரிய பொய் இது. டெல்லிக்கு போனார் அண்ணாமலை என்ன ஆச்சு? அண்ணாமலை மீது பாஜக மத்திய தலைமைக்கு மிகப் பெரும் மரியாதை இருக்கிறது. அண்ணாமலை டெல்லியை பொருத்தவரை நூற்றுக்கு நூறு மார்க்கில் இருந்து கொண்டிருக்கிறார். இங்கு சிலர் கிளப்புவிட்ட புரணியினாலே அங்க போய் விட்டு வந்தபோது அண்ணாமலை மீதி இருந்த மதிப்பு டெல்லியில் இரு மடங்கு உயர்ந்து விட்டது.
குறிப்பாக அண்ணாமலைக்கு நூற்றுக்கு நூறு என இருந்த மதிப்பு இவர்கள் கிளப்பிய புரளியினால் நூற்றுக்கு 200 ஆக உயர்ந்துவிட்டது. அண்ணாமலை சொல், செயல் ஆதாரங்கள் எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் நடப்பதை எல்லாம் அங்கே காண்பித்த உடனே மத்திய தலைமை அவர் மீது மீண்டும் பாசத்தை கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறது, மிகுந்த நம்பிக்கையோடு வந்துள்ளார் அண்ணாமலை. இது என்ன காங்கிரஸ் கட்சியா? காலையில் ஒரு தலைவர், மாலையில் ஒரு தலைவர், ராகுலுக்கு வேண்டிய ஒரு தலைவர் சோனியாவுக்கு வேண்டிய ஒரு தலைவர் என இருக்கிற கட்சியா? அப்படி கிடையாது' என எஸ்.ஆர்.சேகர் கூறி இருக்கிறார்.
எஸ் ஆர் சேகர் கூறிய இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கமலாலயத்தில் இருக்கக்கூடிய ஒரு சிலரிடம் பேசிய பொழுது அண்ணாமலை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கும் யாத்திரையில் டெல்லியின் முழு ஆசியுடன் இதற்கு முன்பு இருந்ததை விட இன்னும் அதிக வலுவாக ஆரம்பிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் அண்ணாமலையைப் பற்றி டெல்லி பாஜகவிற்கு தவறான தகவலை அனுப்பிய சில எதிர்கட்சியினருக்கு இந்த விவகாரம் பேரிடியை இறக்கியது போல் உள்ளதாம், அண்ணாமலைக்கு எதிராக சில தகவல்களை கூற போய் அது இப்படி அண்ணாமலைக்கு நூற்றுக்கு 200 மார்க் வாங்கி கொடுத்து விட்டது எனவும் வேறு சிலர் புலம்பி வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.