24 special

லேசாக கசிந்த செய்தி..! இதுதான் சமயம் என முதல்வர் குடும்பத்திற்கு கனிமொழி பார்த்த வேலைகள்...!

mkstalin ,kanimozhi
mkstalin ,kanimozhi

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பு திமுக தனது வாக்குறுதிகளில் பல மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை அள்ளி வீசியிருந்தது. அதில் குறிப்பாக அனைத்து மகளிராலும் கவரப்பட்ட மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாயை திட்டம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்ற ஆவல் அனைத்து மக்கள் தரப்பிலும் ஏற்பட்டது. 


ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆட்சி புரிந்த பிறகு திமுக இந்த திட்டத்தை பற்றி ஆலோசித்து அறிவிப்பை வெளியிட்டு அதற்குப் பிறகு அதில் சில வரைமுறைகளை வரையறுத்து சில தகுதிகளையும் வரையறுத்து அவர்களுக்கு மட்டுமே இந்த மகளிர் தொகை திட்டம் என்று அறிவித்தது. அந்த தகுதியில் வரும் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கபடும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அந்த கருத்தும் கேள்விக்குறியாகும்படி திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 50 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

விண்ணப்பித்தவர்களில் ஏராளம் நபர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் அரசு அலுவலகங்களில் முண்டி மோதிக்கொண்டு அந்த மக்கள் இருக்கும்பட்சத்தில் சரியான பதில்கள் அரசு தரப்பில் தெரிவிக்கப்படாமல் அரசு இணையதளம் முடங்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ஆக மொத்தம் இந்த மகளிர் திட்டம் மூலம் தமிழக மகளிரை கவர்வதாக திட்டம் போட்ட திமுக அரசுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது போன்று திட்டத்தால் பெரும் அதிருப்தியே திமுக மீது தமிழக மகளிருக்கு ஏற்பட்டது. 

அதற்குப் பிறகு சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை அமைத்து உதயநிதி ஸ்டாலின் முன் வைக்க அந்த எதிர்ப்பிற்கு அவர்களின் ஆசை கூட்டணியான I.N.D.I.A கூட்டணியிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி திமுக மீது அதிருப்தி ஏற்பட்டதும் செய்திகளில் வெளியாயிருந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது என தொடர்ச்சியாக திமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அடுத்தடுத்து ஏற்பட்டது. 

இப்படி தொடர் திமுக பின்னடைவால் தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் விலகிச் செல்லும் எனவும் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தோல்வியை தழுவும் என்ற தகவல்கள் அறிவாலயத்திற்கு கசிந்துள்ளதாக தெரிகிறது. 

இதன் காரணமாக கனிமொழி இந்த விவகாரங்கள் அனைத்தையும் விடக்கூடாது எனவும் வரும் தேர்தலில் அதிலும் குறிப்பாக I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது மேலும் வரும் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மகளிர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மகளிர் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக I.N.D.I.A கூட்டணியில் இருந்து முடிவு கிடைத்துவிடும் என்பதற்காக உடனடியாக இந்த மகளிர் கூட்டத்தை ஏற்பாடு செய்து நல்லபடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என கனிமொழி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது திமுக மகளிர் அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி சென்னையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதில் காங்கிர ஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மற்ற சில மாநிலப் பெண் தலைவர்கள் பங்கிற்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமின்றி திமுகவின் தலைமையில் இருந்து உதயநிதி பேசினால் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கனிமொழியே இந்த கூட்ட ஏற்பாடுகளை பார்க்கட்டும் என அறிவாலய தலைமை முடிவெடுத்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கனிமொழி இதுதான் சமயம் என முதல்வர் குடும்பத்தை விட தன்னை முன்னிலைப்படுத்தும் சில காய்களை நகர்த்த துவங்கிவிட்டார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.