தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் அவரது பேச்சுக்கள் தமிழகத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து, மத்திய உளவு அமைப்புகள் கடந்த மூன்று மாதமாக சேகரித்த தகவல்கள் முக்கிய நபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் அதில் இடம்பெற்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.
பொதுவாக பாஜக என்றால் மோடி என்பது நாடுமுழுவதும் உள்ள பாஜகவினரின் வெற்றி முழக்கம், அதே நேரத்தில் பாஜக வளர்ச்சி என்பது மாநிலத்தில் பிரதமர் மோடியை போன்று அக்கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளபட்ட தலைமை கிடைத்தால் அந்த மாநிலத்தில் பாஜக இரட்டை வளர்ச்சி அடைகிறது, அதற்கு உதாரணம் உத்திர பிரதேசம்.
மோடி மற்றும் யோகி என்ற இரட்டை வளர்ச்சி மிக பெரும் வெற்றியை பாஜகவிற்கு தேடி தந்துள்ளது, அதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய முகத்தை உருவாக்க மோடி முயற்சி செய்து வருகிறார், தலைவர்கள் மாறினாலும் பாஜகவின் ஆட்சி நிலைக்க வேண்டும் என கணக்கு போட்டு செயல்படுகிறார் மோடி.
அப்படி இருக்கையில் பாஜக ஆட்சி அமைக்க மிகவும் சிரமமான மாநிலம் என கணிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது, தெற்கே தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுசேரியிலும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது, இந்த சூழலில் தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடு கிடைத்துள்ளதாக ரிப்போர்ட்டில் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அக்கட்சியில் தொண்டர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை காட்டிலும் அண்ணாமலைக்கு பாஜகவினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி விழாக்களில் அண்ணாமலை கலந்துகொள்ள சென்றால் அவரால் நகர முடியாது அளவு தன்னெழுச்சியாக தொண்டர்கள் அவரை சந்திக்க முயல்கிறார்கள்.
இதில் கன்னியாகுமரி கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு குறித்தும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள், அண்ணாமலைக்கு தமிழகத்தை தாண்டி குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கூட நல்ல வரவேற்பு இளம் தலைமுறையினர் இடையே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அண்ணாமலையை தென் இந்தியாவின் முகமாக முன்னிறுத்த பிரதமர் மோடி கணக்கிட்டுள்ளாராம், இதையடுத்து தான் அண்ணாமலை குஜராத் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முகமாக மட்டுமின்றி தென் தமிழகத்தின் முகமாகவும் அண்ணாமலை உருவாகும் நேரம் வந்து இருப்பதால் நிச்சயம் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளதாம்.