24 special

விமான நிலையத்தில் க்ளூ கொடுத்து விட்டு சென்ற அண்ணாமலை...! எல்லாமே பிளான் தானா...?

annamalai ,pm modi
annamalai ,pm modi

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பாஜக கூட்டணி குறித்த அரசியல் கருத்துக்களே பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது, அதிமுக தரப்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடி பின்னர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் விடுவித்துக் கொள்கிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இந்த கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அப்பொழுது நான் இப்பொழுது யாத்திரையில் இருக்கிறேன், மேலிடத்தில் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன் பிறகு தான் என்னால் பதில் கூற முடியும் என கூறினார்.இந்த நிலையில் யாத்திரையில் மூன்று நாட்கள் இடைவேளை வரும் வேளையில் அந்த இடைவேளையில் டெல்லியில் சில தலைவர்களை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணமானார். 


கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி பயணம் சென்று பின்னர் இரண்டாம் தேதி டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு பிறகு மூன்றாம் தேதி சென்னை திரும்புவது என அண்ணாமலையின் திட்டம். அதற்காக இன்று கோவையிலிருந்து டெல்லி கிளம்பினார்.அப்போது விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தி.மு.க-வினர் பொய் பேசுவதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள். கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் இல்லை. யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. இதுவொன்றும் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கிறது. கட்சியைப் பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சரியான நேரத்தில் தேசிய தலைமை முடிவு செய்யும்" என கூறினார்.

மேலும் அவர் பேசியபோது "அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணியால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடைவும் ஏற்படாது. எனவே, 2024 தேர்தலுக்கு நாங்கள் முழு உறுதியுடன் இருக்கிறோம். இன்றைக்கு 57 சதவிகித வாக்காளர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் இன்ஸ்டாவில் வாழ்கின்றனர். அவர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்த தேர்தல்களில் இருக்கப் போகின்றனர், அவர்கள் தான் முக்கியமானவர்கள் அது இங்குள்ள கட்சிகளுக்கு பெரும்பாலும் தெரியவில்லை! தமிழகத்தில் நிறைய இடங்களில் ஜெயிப்போம். அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.இப்படி கூறிவிட்டு அவர் டெல்லி கிளம்பினார். இதன் பின்னணி, டெல்லியில் அவர் யாரை சந்திக்கிறார் என்பது போன்ற விவகாரங்களை நாம் விசாரித்த பொழுது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதாவது டெல்லி சென்ற அண்ணாமலை ஜே.பி.நட்டா, அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். சந்தித்து தமிழகத்தின் தற்போதைய நிலை அதுவும் குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி பிரிவிற்கு பிறகு என்ன நடக்கும் என்பது போன்றவற்றை அண்ணாமலை தெளிவாக எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது. 

இது மட்டுமல்லாமல் அண்ணாமலை கூறியது போன்று 2024 தேர்தலுக்கு கிட்டத்தட்ட 57% வாக்காளர்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் அவர்கள் அனைவரும் இப்போதே அரசியல் சூழலில் என்ன நடக்கிறது, வரும் தேர்தல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அந்த தேர்தலில் யாருக்கு நாம் வாக்களிக்கவேண்டும்? கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்த நற்காரியங்கள்! அதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது செய்த ஊழல்கள் என  இவை அனைத்தும் பெரும்பாலானவர்களுக்கு தெரிகிறது ஆனால் இவர்கள் யாரும் எந்த கட்சியும் சாராதவர்களாக இருக்கிறார்கள் இவர்களில் பெரும்பான்மையான பாஜகவிற்கு வாக்களித்தாலே தமிழகத்தில் இருந்து இரட்டை இலக்க அளவில் பாஜக mpக்களை பெறுவோம் இதுவும் அண்ணாமலை திட்டம் தான் எனக் கூறப்படுகிறது. 

இதனையே டெல்லி தலைமையிடம் அண்ணாமலை கூறவிருக்கிறார் எனவும் தெரிவிக்கின்றனர். டெல்லி தலைமையைப் பொறுத்தவரை பாஜக என்பது இங்கு கூட்டணியில் இருக்கும் இருக்கக்கூடாது என்பது அவர்கள் முடிவல்ல, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தமிழகத்திலிருந்து எம்பிக்கள் வேண்டும் அதுவே டெல்லியின் முடிவு. அந்த இரட்டை இலக்கத்தை எடுத்துக் கொடுப்பதற்காக அண்ணாமலை திட்டத்துடன் டெல்லி தலைமையை சந்தித்துள்ளார் எனவும் தெரிகிறது. அதனால் தான் அண்ணாமலை கிளம்புவதற்கு முன்பு 57% 35 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறிவிட்டு சென்றார் எனவும் கூறுகின்றனர் சில பாஜக முக்கிய நிர்வாகிகள்...