24 special

அரசு போக்குவரத்து கழகத்தை தாரை வார்க்கும் திமுக அரசு?...அரசியல் கட்சியினர் குற்றசாட்டு!

mk stalin, edapadi
mk stalin, edapadi

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயக்கப்டுவதால் அதனை, தனியார் மயமாக்கி நஷ்டத்தை ஈடுசெய்து லாபம் காணலாம் என்று முதலாவதாக சென்னையில் 1,000 பேருந்துகளை தனியார் வசம் விட்டு படிப்படியாக மொத்தமாக தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இதனை அறிந்த அரசு பேருடந்த்து ஓட்டுனர்கள் போராட்டம் வரை சென்றனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ``அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும். எனவே, தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறியிருந்தார். இதன் மூலம் தனியார் மயமாக்குதல் இல்லை என நம்பி அரசு ஓட்டுனர்கள் சுகுமாக சென்று பானையை தொடங்கினர். 


தற்போது அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க துடிக்கிறது திமுக அரசு, செப்.30ம் தேதி வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிமுக ஆட்சியின் முடிவில் கடைசியாக 3324, சென்னை  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட்டன. இப்போது இருக்கும் விடியா திமுக ஆட்சியில் செப்.,30 ம் தேதி வரை 2,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல பேருந்து சேவைகளை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது. திமுக அரசு அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேடரியதாக முலமைச்சர் பச்சையாக பொய் சொல்கிறார் என எடப்பாடி பழனிசாமி  விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய எடப்பாடி "மக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திடங்களையும், திமுக ஆட்சியின் அவலங்களிலும் கேட்டாக வேண்டும் அப்போது தான் தெரியும் திமுகவின் லட்சணங்கள் மேலும் திமுக இதுவரை 10% வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது" என விமர்சித்தார். 

30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு மேல், "போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது" என குற்றம் சாட்டினார்.

மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த ஓட்டுனர்கள், நடத்துனர்களை நேர்மையான முறியள் பணியமர்த்த இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார். இதேபோல் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன், திமுக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, தற்போது போக்குவரத்து கழகங்கள் முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பது ஆளும் திமுக அரசின் விரோதப் போக்கையே காட்டுகிறது. தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை திரும்பப் பெறுவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். என குற்றம் சாட்டினார்.