பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து முதல்வரின் துபாய் சுற்றுப்பயணம் குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், திமுகவின் ஆர்.எஸ் பாரதி அண்ணாமலைக்கு டிபர்ஃமேஷன் கேட்டு நோடீஸ் அனுப்பி உள்ளார். அவரை தொடர்ந்து திமுக எம்.பி வில்சன்அவர்களும் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதற்கு தக்க பதிலடி கொடுத்து பேசி உள்ளார் அண்ணாமலை.
அதில், நக்கீரன் வார இதழ் மற்றும் ஜுனியர் வார இதழ் உள்ளிட்ட இதழ்களில், ஹவாலா பணம் மூலம் 5 ஆயிரம் கோடி வரை துபாய்க்கு சென்று உள்ளது என திமுகவை பற்றி செய்திகளில் வெளி வந்து உள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதியன்று திமுகவின் குடும்பத்தினர் அவரது ஆடிட்டரை அழைத்து கொண்டு துபாய்க்கு சென்று உள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஷண்முகராஜ் ஆக 9 பேர் சென்று இருக்காங்க.
துபாய் சென்ற பிறகு சபரீசன் யூசுப் அலியுடன் மீட்டிங் முடித்துவிட்டு அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் கூட நீங்கள் அனைவரும் பார்க்கலாம். இதை எல்லாம் ஆதாரமாக வைத்துக்கொண்டு நாம் எழுப்பும் எந்த கேள்விக்கும் தக்க பதில் கொடுக்காமல், அதற்கு பதிலாக போறவன் வரவனை எல்லாம் கைது செய்து வாயை அடைத்து விடலாம் என எண்ணினால், இங்கு நான் ஆதாரத்தோடு அமர்ந்து இருக்கேன் என்னை வந்து கைது செய்யுங்கள் பார்ப்போம்
ஆக மொத்தத்தில் 5000 கோடியின் மர்மம் என்ன ? நிறைவு பகுதியில் உள்ள துபாய் expo வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இப்படி கடைசி நேரத்தில் தமிழ்நாடு அரங்கம் துவங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன? தற்போது துபாயில் இருந்து வரும் நிதி குடும்பத்திற்கு வரும் நிதியா? தமிழக மக்களுக்காக வரும் நிதியா? அல்லது கோபாலபுரத்திற்கு வரும் நிதியா என கேள்வி எழுப்பி உள்ளார் அண்ணாமலை.
இப்படி ஒரு நிலையில் 100 கோடி ருபாய் டிபர்மேஷன் கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கெல்லம் ஒரே பதில், தற்போது 12.15 மணி -மதிய வேளை சரியாக 6 மணி நேரம் தருகிறேன். அதாவது 6.15 மணிக்குள் வந்து என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம். நான் ஒரு முடிவோடு தான் இருக்கிறேன் என பகிரங்கமாக சவால் விடுத்து உள்ளார் அண்ணாமலை.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், என் மீது டிபர்ஃமேஷன் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் கொடுக்கலாம், அட்வகேட் ஜெனரல் கொடுக்கலாம். முதலமைச்சருக்காக ஆர்.எஸ்.பாரதி கொடுப்பதற்கு சட்டத்தில் சிஆர்பிசி 490, 500 படி வாய்ப்பு இல்லை. ஆனால் இது கூட தெரியாமல் ஆர்.எஸ் பாரதி, வில்சன் அவர்களும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதை எல்லாம் சட்டத்தின் முன் சந்திக்க தயாராக இருக்கிறேன். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இதுபோன்ற டிபர்ஃமேஷன் அனுப்பும் போது மொத்தமாக அனுப்பி விடுங்கள். எல்லாத்துக்கும் பதிலடி இருக்கு என பகிரங்கமாக அண்ணாமலை சவால் விடுத்து உள்ளார். இவ்வளவு ஆதாரங்கள் முன் வைத்தும் என்னை நீங்கள் அரெஸ்ட் செய்யவில்லை என்றால் மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள் என்பதையும் கூட நான் இங்கே பதிவு செய்கிறேன் என கூறி சற்று கிண்டலாக பேசி உள்ளார் அண்ணாமலை.
நிலைமை இப்படி இருக்கும் போது, இது குறித்து துபாயில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "எதிர்க்கட்சிகள் என்றால் இப்படி தான் பேசுவார்கள். அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என எளிதாக எடுத்துக்கொண்டு பதில் அளித்து உள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி பார்த்தால் விவரம் அறிந்த அண்ணாமலையை கைது செய்வது மிகவும் கஷ்டம். அதற்கு பதிலாக அண்ணாமலைக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறதா காவல்துறை என்ற கேள்வியை மக்கள் எழுப்ப தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.