24 special

உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை... இனி பேசுவாரா?

Udhayanithi stallin and annamalai
Udhayanithi stallin and annamalai

சட்டசபையில் நடைபெற்ற சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய உதயநிதி, தாம் கடந்த முறை பேசும் போது எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும், இம்முறை அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.


கடந்த வாரம் தமது காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முற்பட்டதை நினைவுகூர்ந்த உதயநிதி, தாங்கள் வெளிநடப்பு செய்து சென்றாலும் தனது வாகனத்தில் தான் செல்வீர்கள் என்றும் தானும் அப்படி தங்கள் காரில் ஏற முயன்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது காரில் கமலாலயம் மட்டும் செல்லாதீர்கள் என உதயநிதி கிண்டல் செய்து இருந்தார்.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பினார், அப்போது நிருபர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் பக்கம் மட்டும் செல்லவேண்டாம் என குறிப்பிட்ட கருத்து குறித்து கேள்வி எழுப்ப பட்டது.

அதற்கு பதில் கொடுத்த அண்ணாமலை உதயநிதி கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும், தலை முறை தலைமுறையாக வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை என அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக கூறினார்,  உதயநிதி சட்டசபையில் கமலாலயம் குறித்து கிண்டல் செய்த நிலையில்.,

முறையான பதிலடியை அண்ணாமலை கொடுத்துள்ளார், இதன் மூலம் உதயநிதி இனி கமலாலயம் குறித்து கேள்வியோ அல்லது கிண்டலோ செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.