பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் தெரிவித்த கருத்து குறித்து அண்ணாமலை விளக்கமாக பதில் கொடுத்தார், மேலும் விரைவில் இரண்டு அமைச்சர்கள் செய்த ஊழல் குற்றசாட்டு குறித்து ஆதாரத்தை வெளியிட போவதாகவும் தெரிவித்தார் அண்ணாமலை.
அதன் பிறகு பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு பக்க சார்பாக ஒரே கேள்வியை கேட்க அண்ணாமலை அந்த நபரை நோக்கி அண்ணா உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் வந்துரும் என நக்கல் செய்தார், அதாவது திமுகவிடம் சிலர் விலை போய்விட்டு இதுபோன்று பேசுவதாக அண்ணாமலை குறிப்பிட்டார் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் குரல் எழுப்பி கொண்டு இருக்கின்றன.
அதில் ஒரு அமைப்பாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் என்ற அமைப்பு பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்காத வரை, அண்ணாமலையின் பேட்டியை ஊடகங்கள் வெளியிட கூடாது என வலியுறுத்தியது. அதோடு நில்லாமல் குணசேகரன் மற்றும் கார்த்திகை செல்வன் இருவரையும் டேக் செய்து அந்த அமைப்பு தங்கள் ஆதங்கத்தை கதறல் வடிவில் வெளியிட்டு இருக்கிறது.
இந்த சூழலில் அந்த அமைப்பின் கோரிக்கைக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார் ட்விட்டரில் அண்ணாமலை தெரிவித்ததாவது.அன்புள்ள CMPC பத்திரிகை மீது எங்களுக்கு உண்மையான மரியாதையும் அன்பும் இருக்கிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன மற்றும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் மரியாதை கிடைக்கும்.
நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினால், அதைச் செய்ய நீங்கள் தாராளமாக செய்யலாம் அதற்கு முன் மனசாட்சியை கேட்டு பாருங்கள் புகாரளிப்பதில் உங்கள் தர்மம் மற்றும் நெறிமுறைகளைப் பேணுகிறீர்களா?என அண்ணாமலை ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் என அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும் என பேசிய அமைப்பிற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Dear CMPC
— K.Annamalai (@annamalai_k) May 28, 2022
We have genuine respect & love for press. A coin has two sides & respect has to be given & taken
If you want to boycott me, you are free to do it🙏
Before that,request you to do some soul searching & ask yourself are you maintaining your dharma & ethics in reporting? https://t.co/FOkZESFDcq