24 special

7 அடுக்கு பாதுகாப்பு... 20 அடி ஆழ சுரங்கம்... மொசாத் நுழைந்தது எப்படி? ஈரானின் சர்வாதிகாரி வீழ்ந்த அந்த கடைசி நிமிடங்கள்

BENJAMINNETANYAHU,
BENJAMINNETANYAHU,

ஈரானின் சர்வாதிகாரி  அயதுல்லா அலி காமேனியின் பாதுகாக்கப்பட்ட மாளிகை தரைமட்டமாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறை மொசாத்தின்  திறமையை பறைசாற்றியுள்ளது.  டெஹ்ரானின் மையப்பகுதியில் 'பெய்ட்-இ ரக்பரி' (தலைமைத்துவத்தின் வீடு) என்று அழைக்கப்படும் இந்த மாளிகை, மிக மிக பாதுகாக்கப்பட்ட இடமாகக் கருதப்பட்டது. 1989 முதல் காமேனி வசித்து வந்த இந்த இடத்தை சுற்றி 500 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புப் படை வீரர்கள் ஏழடுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.


குறிப்பாக, சீனாவின் 'அயன் டோம்' தொழில்நுட்பம் போன்ற வான் பாதுகாப்பு வசதிகளும் அங்கு இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே, வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க மாளிகையின் உட்புறம் 20 அடி ஆழத்தில் அதிநவீன சுரங்க அறை அமைக்கப்பட்டு, அங்கேயே முக்கியமான ஆலோசனைகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. ஒரு தந்திரமாக, அதிபர் அலுவலகம் அருகே உள்ள மற்றொரு வீட்டில் காமேனி தங்கியிருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், அவர் உண்மையில் பழைய மாளிகையின் சுரங்கத்திலேயே ரகசியமாக வசித்து வந்தார். அந்த வீட்டைச் சுற்றியுள்ள சாதாரண குடியிருப்புகளில் ஈரான் அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாத்' பல ஆண்டுகளாக இந்த ரகசியங்களைக் கண்டறிய தீவிரமாகப் பணியாற்றி வந்தது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) அமைப்புடன் இணைந்து மாளிகையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவர்கள் ஆராய்ந்தனர். குறிப்பாக, அங்கிருந்த சில ராணுவ வீரர்களைத் தங்கள் பக்கம் இழுத்த மொசாத், அவர்களின் உதவியுடன் காமேனியின் நடமாட்டத்தை மிக நெருக்கமாகக் கண்காணித்தது. 

மேலும் ஹிஜாப்' விவகாரத்தில் ஈரானியப் பெண்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கிய விதம், மாசா அமினி போன்ற பெண்களின் உயிரிழப்புகள் . தன் சித்தாந்தத்திற்கு எதிராகப் பேசுபவர்களைச் சிறையிலடைப்பதும், தூக்கிலிடுவதும் அவரது வழக்கமாக இருந்தது.

மேலும்  ஈரானின் கனிம வளங்களையும், நிதியையும் தன் நாட்டின் மக்களின் நலனுக்காகச் செலவிடாமல், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்குத் திருப்பிவிட்டதால் ஈரான் மக்கள் கடும் வறுமையிலும் பணவீக்கத்திலும் தவித்தனர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்தார்.ஒரு தலைவர் தன் மக்களை நேசித்தால் அங்கே துரோகிகள் உருவாக மாட்டார்கள். ஆனால், காமேனியின் ராணுவத்திலேயே மொசாத்திற்கு ஆட்கள் கிடைத்தார்கள் என்றால், அவரது சொந்த வீரர்களே அவர் மீது அதிருப்தியில் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் தான் ஈரானின்  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நேரத்தை கண்டுபிடிதத  மொசாத், உடனடியாக "ஆபரேஷன் எபிக் பியூரி" (Operation Epic Fury) என்ற பெயரில் தாக்குதலை முடுக்கிவிட்டது. அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உதவியுடன், இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவிய நீண்ட தூர ஏவுகணைகள் துல்லியமாக அந்த மாளிகையைத் தாக்கின. இதில் சுரங்க அறைக்குள் இருந்த அயதுல்லா அலி காமேனி, முன்னாள் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷம்கானி மற்றும் ஐஆர்ஜிசி தளபதி முகமது பக்கூபூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், காமேனியின் குடும்ப உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது 

காமேனியின் மரணம் என்பது ஈரானின் ஒரு நீண்ட கால ஒடுக்குமுறை ஆட்சியின் முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஈரானிய மக்கள் பலரும் இந்த மாற்றத்தை ஒரு விடுதலையாகவே கருதுகிறார்கள்