24 special

பேரறிவாளன் விடுதலை இஸ்ரேல் போன்று இந்தியாவும் செய்கிறது தெரிவித்த பரபரப்பு பின்னணி!

perarivalan release
perarivalan release

சிறைத்தண்டனை கைதி பேரறிவாளன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவரை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம், இந்த சூழலில் அண்ணாமலையின் இலங்கை பயணம், பேரறிவாளன் விடுதலை உள்ளிட்ட தகவல்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருக்கிறார் பிரம்ம ரிஷி (புனைப்பெயர் )


இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-  பேரரிவாளன் விடுதலை என்பதை இந்திய சட்டம் பலவீனமாது, பேரரிவாளன் விடுதலை என்பதை இந்திய சட்டம் பலவீனமாது என்பதை தாண்டி பல கோணங்களில் பார்க்க வேண்டும், இப்பொழுது உலக பரபரப்பு செய்திகளில் ஒன்றாகியுள்ள இந்த விவகாரம் குறிப்பாக இலங்கைக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள இந்த தீர்ப்பு பற்றி இந்தியா தாண்டி உலக அளவில் பேசபடும் அலசல்களை இங்கு பார்க்கலாம்.

நிச்சயம் இந்திய உள்துறை அமைச்சகம் புகுந்து இதெல்லாம் தேசிய பாதுகாப்பு பிரச்சினை, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யபட்ட இயக்கம் என பல வாதங்களை முன்வைத்தால் நீதிமன்றம் மறுத்திருக்க முடியாது, தேசிய பாதுகாப்பில் நீதிமன்றம் ஒரு காலமும் சமரசம்செய்ய முடியாது.

இந்த வழக்கின் இறுதியில் மத்திய அரசு மவுனம் காத்தது வலுவான வாதம் எதையும் வைக்கவில்லை, அதற்கு முன்பே அண்ணாமலையின் இலங்கை பயணம், ஈழஅபிமானிகளின் திடீர் பாஜக ஆதரவெல்லாம் பெரும் கவனத்தை ஈர்த்தன, பழ.நெடுமாறன் காசி அனந்தன் போன்ற பிம்பங்களெல்லாம் அண்ணாமலை பக்கம் வரும்பொழுதே ஏதோ விவகாரம் தட்டுபட்டது.

இன்று புலிகள் இயக்கம் இல்லை, பேரரிவாளனை வெளியே விட்டால் பெரும் அசமபாவிதம் நடக்க போவதுமில்லை இனி இவர்கள் உள்ளே இருந்தாலும் ஒன்றுதான் வெளியே வந்தாலும் ஒன்றுதான், அந்த இடத்தில்தான் சர்வதேச அரசியலை கையில் எடுக்கின்றது இந்தியா.

உலக நாடுகளின் தேர்ந்த உளவுதுறைகள் இதை செய்யும், பின்லேடனின் மறைவுக்கு பின் அல்கய்தா பலமிழந்த பின் அமெரிக்கா ஏகபட்ட அல் கய்தா மற்றும் தாலிபன்களை விடுவித்தது அதிலெல்லாம் கனத்தை உளவுதுறை அனுகூலமும் அரசியலும் இருந்தது இஸ்ரேல் அடிக்கடி இதை செய்யும், ஆபத்தில்லா பாலஸ்தீன போராளிகளை விடுவித்து தனக்கு வேண்டியதை பெற்றுகொள்ளும்.

இப்பொழுது இந்தியாவும் இந்த ராஜதந்திரத்தில் வந்துவிட்டது, முதலாவது இவர்கள் விடுதலை செய்யபடுவது மூலம் இலங்கை அரசுக்கு ஒரு செய்தி சொல்கின்றது, அப்படியே தமிழக அரசுக்கும் ரகசிய செய்திகள் உணர்த்தபட்டிருக்கின்றது, காங்கிரஸால் ஏற்பட்ட ஈழகுழப்பத்துக்கும் அதன் கொடூர விளைவுகளுக்கும் முந்தைய காலத்தையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்துகின்றது பாஜக அரசு.

அதாவது எதெல்லாம் ஈழசிக்கலின் கண்ணிகளோ அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்க்க தொடங்கிவிட்டது, இனி ஈழ அரசியல் தமிழகத்தில் நிறைவு பெறும், அடுத்த ஆட்டத்தை பாஜக ஆரம்பிக்கும், பேரரிவாளன் விடுதலைக்கு பாஜக சார்பில் ஒரு சத்தமில்லை என்பதை கவனித்தால், அண்ணாமலை வரவேற்றிருப்பதை கவனித்தால், இன்னும் பழ.நெடுமாறன் அண்ணாமலை அருகே இருந்து வரவேற்பதை கவனித்தால் ஒரு விஷயம் உங்களுக்கு புலனாகும்.

பேரரிவாளன் சட்டபடி விடுதலையாகி இருக்கலாம், ஆனால் மத்திய அரசு தன் வழக்கமான தடையினை கொடுக்காமல் மவுனமாக அவன் விடுதலையாக தலை அசைத்தது என்பதுதான் உண்மை, இனி அடுத்து வரும் காட்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம், இப்பொழுது இலங்கைக்கு விடபட்டிருப்பது கனத்த எச்சரிக்கை.

ராஜிவ் கொலையினை தாண்டி இந்தியா அடுத்த கட்டத்துக்கு வருகின்றது, இனி ஈழவிவகாரங்களில் இந்தியா தலையிட ராஜிவ் கொலை ஒரு தடையாக இருக்காது எனும் செய்தியினை இந்தியா மவுனமாக சொல்கின்றது, சுமார் 30 ஆண்டு காலம் ராஜிவ் கொலையினை வைத்து இந்தியாவுக்கு அணை போட்ட இலங்கை இப்பொழுது கனத்த அதிர்ச்சியில் இருக்கின்றது, இவர்களை விடுதலை செய்துவிட்டு ஈழபக்கம் இந்திய அரசு கால் வைக்கும்பொழுது பெரும் வரவேற்பு இந்தியாவுக்கு வடக்கே கிடைக்கும்.

அதை நோக்கித்தான் இந்தியாவின் நகர்வுகள் தெரிகின்றன‌, ஆக இலங்கைக்கு சுத்தமாக நேரம் சரியில்லை 12 கட்டத்திலும் சனிபகவான் தன் குடும்பத்தோடு அமர்ந்து அடித்து கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார் பிரம்ம ரிஷி.