ஹரியானா : குருஷேத்திரத்தில் பாபா லக்கி ஷா வஞ்சரா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மாநில முதல்வர் ஹரியானா மாநில அரசு புதிதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஆணையம் கவனித்துக்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்.
பாபா லக்கிஷா ஜெயந்தியை முன்னிட்டு அந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மனோகர் லால் கட்டார் "பாபா பண்டா சிங் அவர்களின் பூர்விகமாக லோகர் நகரம் மேம்படுத்தப்படும். அதில் பாபா லக்கிஷா வஞ்சரா அவர்களின் பெயரும் இடம்பெறுவது உறுதிசெய்யப்படும். குருஷேத்ரா நகராட்சியில் வஞ்சாரா அவர்களின் பெயரில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.
லாபா பவன் அமைப்பதற்கான இடங்களை ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வஞ்சாரா சமூகத்தினர் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல நேர்மையானவர்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். வஞ்சாரா சமூகத்தை சேர்ந்த பலர் பட்டியல் சாதிகள் வரம்பிற்குள்ளும் சிலர் பிற்படுத்தப்பட்டோர் வரம்பிற்குள்ளும் உள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே பட்டியல் சாதியில் சேர்க்கவேண்டும். வஞ்சாரா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பாபா மஹான்ஷா மற்றும் லக்கிம்ஷா பெயரை சமூக மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சூட்ட துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சமூக மக்களுக்கு நிலம் தேவைப்பட்டால் உடனடியாக உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முன்மொழிவை நிறைவேற்றவேண்டும். பிற்படுத்தபட்ட மக்களுக்கு தனியாக ஆணையம் அமைக்கப்பட்டு அந்த கமிஷன் மூலம் அனைத்து திட்டங்களின் பலன்களையும் பயனாளிகள் பெறுவது உறுதி செய்யப்படும்" என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.