லடாக் : சீனா லடாக் எல்லைக்கோட்டுப்பகுதியில் தனது துருப்புகளை இறக்கி போர் ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து LAC யில் இந்திய ராணுவம் ராடார்கள் மற்றும் ராணுவ துணைப்பிரிவுகளை இறக்கிவருகிறது. சமீபத்தில் ராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே லடாக் சென்றிருந்தார்.
லடாக் எல்லைக்கோட்டு பகுதிக்கு சென்ற ராணுவத்தளபதி மனோஜ் சீனாவின் அச்சுறுத்தலைகவனத்தில்கொண்டு எல்லைக்கட்டுப்பாட்டு கொட்டு பகுதியை நேரில் ஆய்வுசெய்தார். மேலும் பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவத்தின் ஆறு பிரிவுகளை லடாக்கில் முகாமிட உத்தரவிட்டுள்ளார்.
இந்திய ராணுவநிலைகளுக்கு எதிராக சீனதுருப்புகளை நகர்த்துவதன் மூலம் எல்லையில் நிலவும் அமைதியை சீனா குலைக்க முற்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சீனா எல்லையில் பதட்டத்தை உருவாக்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ராணுவம் மறுசீரமைப்பு முயற்சியில் எல்லைப்பாதுகாப்பு பணியை கண்காணிக்க 35000 பேர் கொண்ட இரண்டு பிரிவுகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு அங்கிருந்து அகற்றப்பட்டு தற்போது கிழக்கு லடாக் செக்டரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அஸ்ஸாமை தளமாக கொண்ட கஜராஜ் கார்ப்ஸ் வடகிழக்கில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 17வது மவுண்டன் ஸ்ட்ரைக் கார்ப்ஸ் படையும் தற்போது மேற்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் தற்போதுள்ள நிலைமையில் எந்த ஒருமாற்றமும் இல்லை. இந்தியா தனது வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்ற செய்தியை சீன ராணுவத்திற்க்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். இதுவரை 50000துருப்புக்கள் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கிறது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.