பாகிஸ்தான் : பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் கொலைசெய்யபடுவதும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மீடியாக்கள் மற்றும் உலகநாடுகள் இந்தியாவில் எப்போதாவது சில இடங்களில் நடக்கும் சிறுவிஷயங்களை ஊதிப்பெரிதாக்கும் அதேநேரத்தில் பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் அவலங்களை வெளிக்கொணர்வதில்லை என்ற குற்றசாட்டு எப்போதுமே உண்டு.
இந்நிலையில் பாகிஸ்தான் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வியாழனன்று இரண்டு சீக்கிய வியாபாரிகள் கொல்லப்பட்டனர். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது வலுவான கணடனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இது போன்ற தாக்குதல் முதல்முறையல்ல என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இரட்டை சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் " அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்களால் இரண்டு சீக்கிய வியாபாரிகள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்திகளை நாங்கள் பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற நிகழ்வு முதல்முறையல்ல.
அரிதான நிகழ்வும் அல்ல. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு இந்திய சமூகத்தினர் பலரும் சீக்கிய சமூகமும் கடுமையான வருத்தத்தை கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவேண்டும்" என அந்த அறிக்கையில் அரிந்தம் குறிப்பிட்டுள்ளார்.
சீக்கிய வியாபாரிகள் சல்ஜாத் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகிய இருவரும் காலையில் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த பெஷாவர் ஆப்கனிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த பெஷாவரில் பல சீக்கியர்கள் வணிகம் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் குறித்து பஞ்சாப் முதல்வர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் . மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளது கவனிக்கத்தக்கது.