
இந்தியாவின் அரசியல் வரைபடம் ஒரே இரவில் மாறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. இன்றுவரை யாரும் நினைக்காத வரலாற்று திருப்பம் நிஜமாகப் போகிறதா?பிரிவினையின் போது இந்தியாவிடமிருந்து பிரிக்கப்பட்டபகுதிகள் …75 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவுடன் இணையப்போகிறதா என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த மாஸ் அப்டேட் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இது ஒரு சாதாரண அரசியல்கருத்து என்று சொல்லிவிட்டு நகர முடியாது. சிந்து – இந்தியா இணைப்பு சாத்தியமா?அது கற்பனையா… வருங்கால உண்மையா? இந்தக் கேள்விகள் இன்று ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, சர்வதேச எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.அதுமட்டுமில்லாமல் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும், எதிர் காலத்தில் என்ன வெல்லாம் நடக்கும் என்று கடவுளுக்கே வெளிச்சம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் , இந்தியாவுடன் போர் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற சிந்து சமாஜ் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுடன் இணையக்கூடும் எனத் தெரிவித்தது, உள்நாட்டு-வெளிநாட்டு அரசியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் எல்லைகள் நிரந்தரமானவை அல்ல, பண்பாட்டு மற்றும் நாகரீக அடையாளத்தின் அடிப்படையில் சிந்து எப்போதுமே இந்தியாவின் ஒருபகுதியாகத்தான் இருந்துள்ளது தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற நிலைகள் மாறக்கூடும் நாளை சிந்து இந்தியாவுக்கு திரும்புவது சாத்தியமாகலாம் என அடித்து கூறியுள்ளார். இதற்கு முன்பும், மொராக்கோவில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியின் மக்கள் தாமே இஸ்லாமாபாத்தின் ஆட்சியை எதிர்த்து வருவதாகவும், எந்த கூறியிருந்தார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து சிந்து சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் அமைப்பின் தலைவரான ஷாஃபி பர்பத், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதில், சிந்துதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த சுதந்திர இலட்சியத்திற்கும், இந்தியாவுடனான வரலாற்று-பண்பாட்டு உறவிற்கும் இது ஒரு தார்மீக மற்றும் அரசியல் ஊக்கமாக உள்ளதாகக் கூறியுள்ளார். இதனால், இந்திய துணைக்கண்டத்தின் புவிசார் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய புதிய விவாதங்களும் கணிப்புகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன.டெல்லி தாக்குதல் சிந்தூர் ஆப்ரேசன் என இருக்கும் சூழலில் இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது
இந்த நிலையில் தான் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிந்து மாகாணம் பற்றி பேசியிருப்பது பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தனிநாடாக பிரிய ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
