இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் 1000-த்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் உள்நோயாளியாக இருக்கும் நபருடன் இரவு நேரத்தில் நோயாளியின் சார்பில் அவரின் அவசர உதவிக்காக உறவினர் ஒருவர் தங்கிக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவருடைய உறவினர் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறி உள்ளே செல்ல முற்பட்டதாக தெரிகிறது அப்போது அங்கிருந்த காவலாளி முருகன் என்பவர் ஏற்கனவே அந்த நோயாளியுடன் ஒரு நபர் உள்ளதாகவும் மேலும் நபர்கள் தங்க முடியாது என கூறியதாக தெரிகிறது
இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போய் அடிதடியாக மாறி உள்ளது. தற்போது இருவரும் மல்லுக்கட்டி சண்டையிடும் இது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனை சார்பிலும் காவலாளி சார்பிலும் புகார் மனு அளித்துள்ளதாகவும் நோயாளியின் சார்பிலும் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிகிறது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் இன்னும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.