24 special

லியோ படம் வெளியாகுவதில் சிக்கல்? திமுக அமைச்சர் சொன்ன பதில்!

udhayanithi, actor vijay
udhayanithi, actor vijay

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரையரங்கிற்கு வர உள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டது. ட்ரைலர் தொடங்கியது முதல், முடிவு வரை ஆக்க்ஷன் காட்சிகள் நிரம்பி இருந்தது.  அதிலும் சாதார மனிதனாக காட்டப்படும் விஜய் பின்பு எப்படி வில்லன் கூட்டத்தில் சிக்குகிறார் என்ற காட்சிகள் திரையில் வரும் பொழுது விசில் சத்தத்திற்கு பஞ்சமிருக்காது. லோகேஷ் கூட்டணியில் விஜய் இணைவது இரண்டாவது படமாகும். முதலில் மாஸ்டர் படம் மூலம் இணைந்து பெரும் வெற்றி அடைந்தது. தற்போது  ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ படம் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்து படம் நடிக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து, ஆடியோ வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.  விஜய் படம் எது வந்தாலும் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக  ஏற்பாடு செய்து அதில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி கதை சொல்லி ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் செய்வார். அந்த வகையில், லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு காத்திருந்த ரசிகர்களுக்கு, தீடிரென லியோ படத் தயாரிப்பு நிறுவனம் லலித் குமார் எக்ஸ் தளத்தில் "பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்". என அறிவித்தது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். பின்னர் திமுகவின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே ஆடியோ வெளியீட்டுக்கு தடையாக இருப்பதா கருத்துக்கள் வெளியாகின. முழுவதும் ஆராய்ந்து பார்த்தபோது தமிழ்நாட்டில் லியோ படத்தை விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்டிற்கு குடுக்க மருத்துள்ளதால் தான் இது போன்ற சர்ச்சை கிளம்பியது. 

கோபத்தில் இருந்த ரசிகர்கள் சமூக தளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருப்பூர் காங்கேயத்தில் கூட்டம் கூட்டியபோது பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏன் தளபதியின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என கருத்துக்களை முன் வைத்தனர். இதற்கு எல்லாம் திமுக அரசு தான் காரணம் என்று போஸ்டர்கள் ஒட்டி தளபதிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆடியோ லான்ச் தான் இல்லை ட்ரைலரை திருவிழா போல கொண்ட ரசிகர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்கும் குறுகிடையாக நின்றது திமுக அரசு,  எப்போதும் பெரிய ஹீரோக்களின் பட ட்ரைலர் தியேட்டரில் ரசிகர்களுக்கு மட்டும் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் லியோ பட ட்ரைலரை ஒளிபரப்பட அனுமதி கொடுக்கவில்லை. மேலும் கடுப்பில் இருந்த ரசிகர்கள் திமுகவை விமர்சிக்க தொடங்கினர். எப்டியோ ஒரு பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி வாங்கினார். நேற்று சென்னை ரோகினி திரையரங்கில் ட்ரைலர் வெளியிடபட்டது. மகிழ்ச்சியில் கண்டு கழித்த ரசிகரக்ள், தியடரில் இருந்து வெளியில் வரும்போது, இவ்ளோ நாள் கோபத்தில் இருந்ததன் காரணமாக ரசிகர்கள் தியேட்டரின் இருக்கைகள் அனைத்தையும் சேதபடுத்தி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ட்ரைலரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் மு. பெ.சாமிநாதன்-னிடம் செய்தியாளர்கள் விஜய் படத்திற்கு வரும் எதிர்ப்பு பற்றி கேட்டதற்கு "பொதுவாகவே வரும் குற்றச்சாட்டுக்கு அனுமானமாக பதில் சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் புகார் வந்தால் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார். இந்நிலையில் ட்ரைலரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை புகாராக வந்தால் லியோ படம் தலைவா படம் போல் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டுகிறது. மேலும் அமைச்சர் கூறிய பதிலுக்கு ரசிகரக்ள் எதிர்ப்பு தெரிவித்த அரசு கிட்டயே போய் எதிர்ப்பு பற்றி கேட்டால் அவர் இப்படித்தான் பதில் சொல்லுவார் என்று கமெண்டை பதிவிட்டு வருகின்றனர்.