இன்று தொலைக்காட்சிகளை எடுத்துக் கொண்டாலே பலவகையான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி போன்றவற்றை செய்வது என தொடர்ந்து தற்பொழுது சமையல் செய்வதிலும் ரியாலிட்டி ஷோக்கள் உருவாகிவிட்டது. அந்த வகையில் தற்பொழுது சமையல் செய்யும் ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோ தனியார் தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பாகி அனைவரையும் கவனத்தையும் பெற்று வருகிறது. இதில் பல சினிமா பிரபலங்களும் சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களும் பங்கேற்று சமையலுடன் சேர்ந்த காமெடி கலந்த ஒரு நிகழ்ச்சியாக இதனை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் குக்கு வைத்து கோமாளியில் பல காலமாக நடுவராக இருந்து சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தற்போது வேறொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக் டூப்பு குக் என்னும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இவ்வாறு இவர் குக்கவித்து கோமாளியை விட்டு வெளியேறி வேறொரு நிகழ்ச்சியில் நடுவராக வந்தது குறித்து பல வகையான சர்ச்சைகளும் தொடர்ந்து இணையத்தில் எழுந்த வண்ணமே இருந்தது. ஆனால் அந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் சமீபத்தில் வெங்கடேஷ் பட் சரியான விளக்கத்தை அளித்திருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் சைவம் என்பதால் அசைவ உணவுகளை முகர்ந்து பார்த்தே அவற்றின் சுவைகளை கூறுவது நாம் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். ஆனால் அவ்வாறு நுகர்ந்து பார்த்து தீர்ப்புகளை கொடுப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், உண்மையாகவே இதுபோன்று நுகர்ந்து பார்த்து சுவையை அறிந்து கொள்ள முடியுமா என பல கேள்விகள் எழுந்து வந்தது.
இவ்வாறு தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருவதால் சமையல் கலையில் கடந்த 25 ஆண்டுகளாக நிபுணராகவும், சென்னையில் கேட்டரிங் இன்ஸ்ட்யூட் ஒன்றை நடத்தி வருபவருமான செஃப் வினோத்திடம் கேட்டபோது அவர் சரியான விளக்கத்தை அளித்துள்ளார்!!! அது என்னவென்றால்...வெங்கடேஷ் பட் இது போன்று அசைவ உணவுகளை சாப்பிடாமல் நுகர்ந்து பார்த்து அதனுடைய ருசி இப்படிதான் இருக்கும் என்று தீர்ப்பு அளித்து வருகிறார் என்பதை குறித்து நானும் சமீபத்தில் கேள்விப்பட்டேன் என்று வினோத் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் அவர் கூறியதாவது, சமையலை கற்றுக் கொடுக்கும் பொழுதே இதுபோன்று நுகர்ந்து பார்த்து அதனுடைய ருசி இப்படிப்பட்டது என்று சொல்லிவிடும் அளவிற்கு தற்பொழுது உள்ள சில செஃப்களும் கூறி வருகின்றனர். காய்கறிகள் வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு அதனை தொட்டுப் பார்த்தாலே தெரிந்து விடும், இதுபோல தனியா மற்றும் மிளகு போன்றவற்றிற்கு தனி ஒரு வாசனை இருப்பதால் அவற்றையும் நுகர்ந்து பார்த்து பொதுவாக கூறிவிடலாம்.
ஆனால் சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒப்பிற்கு எந்த ஒரு மனமும் கிடையாது. ஒருவேளை அசைவ சாப்பாட்டில் உப்பு குறைவாக இருக்கிறதா என்பதை சுவைத்து பார்த்து தான் கூற முடியும். இசை என்பது முழுக்க முழுக்க நாக்கு சம்பந்தப்பட்ட விஷயம்தான். எனவே நாட்டில் படாமல் வெறும் வாசத்தை வைத்து ருசியை தீர்மானம் செய்வது முடியாத விஷயம் தான் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தானும் வெஜிடேரியன் தான் என்றும், சமையல் கலையை படிக்க தொடங்கிய போது நான் வெஜிடேரியனாக மாறிவிட்டேன் என்றும் கூறியுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதால் இதுபோன்று செய்கிறார்களோ என்னவோ?? ஆனால் ருசித்து பார்க்காமலேயே சுவையை சொல்வது என்பது பொய்யான விஷயம் தான் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நிகழ்ச்சிகளில் கூறும் தீர்ப்பானது முழுக்க கோமாளித்தனமாக தான் இருக்கிறது என்று வினோத் கூறியுள்ளார்.