திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு சென்னை நேராக கடந்த 2022 இல் நியமிக்கப்பட்டவர் பிரியா ராஜன். இதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் வைத்திருக்கும் பதவியோ மேயர் பதவி ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெரும்பாலான நேரங்களில் உளறும் வழக்கத்தையே கொண்டவர்! பதவி ஏற்ற ஆரம்பத்தில் அதிக பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன் என பல வகையில் உளறித் தள்ளி பேசி விடுவார். அதற்குப் பிறகு அந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவும். மேலும் சென்னையும் மழையும் என்றுமே பிரிக்க முடியாத ஒன்றாக இதுவரை இருந்து வருகிறது அதேபோன்று மேயராக பிரியா பதவி வகித்த காலத்திலும் சென்னையில் பெய்த மழையால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருந்திருக்கின்றனர்.
அதற்கு உதாரணமாக கடந்த வருடத்தில் பெய்த மழையை எடுத்துக் கொள்ளலாம், அதற்கு முன்பாக அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையில் பெய்த மழையின் பொழுது ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிக அளவிலான பாதிப்புகளை இந்த முறை சென்னை மக்கள் கண்டு பெரும் துயரில் மீளாமல் தத்தளித்தனர். மேலும் பல நடிகர்கள் நடிகைகள் கூட இந்த மழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்ததாக சமூக வலைதளம் முழுவதும் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதற்கு அரசு தரப்பில் என்ன நடவடிக்கையும் எடுக்கப்படாதா என பல கேள்விகளை முன்வைத்து வந்தனர். மேலும் அந்த சமயத்தில் மேயரின் வீட்டிற்கு சென்று பொதுமக்கள் அனைவரும் எப்பொழுது கரண்ட் வரும் எங்களை மீட்பதற்கு யாருமே ஏன் இதுவரை வரவில்லை நிவாரண பொருட்களும் கிடைக்கவில்லை என சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர்.
இது மட்டுமின்றி கடந்த குடியரசு தினத்தன்று அரசு தரப்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரியா ராஜன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே தனக்கு வந்த மொபைல் அழைப்பை எடுத்து பேசிக்கொண்டு பரிசு வாங்குபவர்களையும் அருகில் மற்ற அதிகாரிகளை காக்க வைத்து பிறகு செல்போன் பேசிக்கொண்டு போட்டோக்கு போஸ் கொடுத்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சென்னையில் நிலவி வந்த கடும் விலைவாசியை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பத்திரிகையாளர்கள் மத்தியில் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது அதற்கு எந்த பதிலும் தெரியாது என்று நேருக்கு நேராக கூறிவிட்டு அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தைப் பற்றி கேள்வி கேட்டவுடன் டான் டான் என அவர் கூறிய பதில்கள் அனைத்துமே சமூக வலைதளத்தில் டிரொல் செய்யப்பட்டது. இதனால் இனி பொதுவெளியிலும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் நீங்கள் பேச வேண்டாம் என அறிவாலய தலைமையில் இருந்தே பிரியாவிற்கு உத்தரவு பறந்ததாக சில தகவல்கள் வெளியானது.
இதனால் பெரும்பாலான பொது இடங்களில் பேசாமலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் தவிர்த்து வந்த பிரியா ராஜன் தற்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது சென்னையில் தெருநாய் ஒன்றுக்கு பிஸ்கட் போட சென்ற சிறுவனை தெரு நாய்கள் கடித்து படுகாயத்தை ஏற்படுத்தியதால் அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனை சந்தித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களின் முடிக்கப்படும். சாலையில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடக்க மாட்டுத் தொழுவம் உருவாக்கப்படும் என்று கூறியதோடு தெரு நாய்களுக்கு அருகில் குழந்தைகள் சொல்லும் பொழுது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி உள்ளார். இதற்கு இவ்வளவு நாள் கழிச்சு இந்த விஷயத்துக்கு தான் நீங்க பத்திரிகையாளர்களை சந்திக்கணுமா என பல கமெண்ட்கள் எழுந்து வருகிறது. மேலும் இனி சென்னை மாநகராட்சி பிரச்சினைகள் அனைத்தும் மேயர் பிரியா உடனுக்குடன் சரி செய்து தலைமைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் உத்தரவு போடப்பட்டுள்ளதாம்...