உலகம் : ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைக்குழுவின் கீழ் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் அப்துல் ரகுமான் மக்கியை உலகளாவிய பயங்கரவாதி என குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டாக ஒன்றிணைந்து முன்மொழிவு செய்தது. ஆனால் அதை கடைசி நிமிடத்தில் சீனா அதற்கு தடைவிதித்து அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.
இந்த அப்துல் ரகுமான் மக்கி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியான லஸ்கர் இ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹபீஸ் 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஒன்றிணைந்து 1267 ISIS மற்றும் அல்கொய்தா தடைக்குழு பட்டியலை முன்மொழிந்தன.
ஆனால் சீனா கடைசி நிமிடத்தில் பட்டியலில் மக்கியை மற்றும் 1267 பேர்கொண்ட பட்டியலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது முதல்முறையல்ல. ஏற்கனவே இந்தியா மற்றும் அதன் நட்புநாடுகள் இணைந்து பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதிகள் பட்டியலை முன்மொழிந்தபோதும் தடைவிதித்திருந்தது.
கடந்த 2019ல் ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் என அறியப்பட்ட மசூத் அன்சாரை ஐநாசபையில் உலகளாவிய பயங்கரவாதி என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சீனா தடைவிதித்துள்ளது அமெரிக்க மற்றும் இந்தியாவை ஆத்திரமடைய செய்துள்ளது. ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினரான சீனா மசூத் அன்சாரை தடைபட்டியலில் சேர்க்க தடைவிதித்தாலும் மற்ற 15 நாடுகளின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மசூத்தை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா பிரான்சு இங்கிலாந்து என அணைத்து நாடுகளும் கொடுத்த சர்வதேச அழுத்தம் ஐநாவை ஒத்துக்கொள்ள வைத்திருந்தது. 2010ல் ல் அமெரிக்கா மக்கியை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் எல்லை வரம்பிற்குட்பட்ட மக்கியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணபரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீனா வீட்டோவை பயன்படுத்தி தடையை உண்டுபண்ணியிருப்பது இரு நாடுகளுக்கும் எரிச்சலை கிளப்பியுள்ளது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதையும் அவர்களை சீனா நடத்தும் விதத்தை பற்றியும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஐநாவில் எடுத்துரைக்க வேண்டும் என உலக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.