24 special

நொய்டாவில் சீன உளவாளிகள்..!? காவல்துறை பகீர்..!


நொய்டா : இந்தியாவில் வெளிநாட்டு உளவாளிகள் உளவு பார்த்துவருவதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஹேக்கிங் செய்ய முற்பட்ட சீனாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நொய்டாவில் சீனாவை சேர்ந்த இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய எல்லைப்பகுதியில் சீனா போர்விமானங்கள் மற்றும் வீரர்களை குவித்து வரும்நிலையில் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. கடந்த செவ்வாயன்று கர்பரா கிராமத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான கட்டிடம் ஒன்றை நொய்டா காவல்துறை அதிரடியாக சோதனையிட்டது. அந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக சீனர்கள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த கட்டிடத்தை சீனர்கள் கிளப்பாக பயன்படுத்தி வந்ததுடன் ரகசியமாக சந்திக்கும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட சீனக்குடிமகன்கள் சட்டத்திற்கு புறம்பாக இந்த கட்டிடத்தில் வசித்து வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று இந்திய நேபாள எல்லையில் SSB இரு சீனர்களை கைதுசெய்திருந்தது. 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நொய்டா புறநகரை ஒட்டியுள்ள கிராமத்தில் தனது சீன நண்பர்களுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. அதேபோல கடந்த திங்கட்கிழமை குருகிராம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் இருந்து இரு சீனர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  மேலும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கர்பாரா கிராமத்தில் உள்ள அந்த கிளப்பின் உரிமையாளரும் சீனர் என்பதை அறிந்த போலீஸ் திகைத்துபோயுள்ளது. ஒரு சீனரால் எப்படி இங்கு நிலம் வாங்கி ஒரு விடுதியை நிர்மாணிக்க முடிந்தது என போலீசார் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர். சீனர்களின் தொடர் கைது குறித்து போலீசார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நாங்கள் சோதனையிட சென்றோம். அப்போது அந்த பாரில் 15 முதல் 20 பேர் வரை சீன பிரஜைகள் இருந்தனர். அதிகாரிகள் அந்த இடத்திற்கு உள்ளே செல்கையில் 15 பேர் தப்பிவிட்டனர். ஆறு பெண்களை மட்டும் விட்டுவிட்டு தப்பிசென்றுவிட்டனர்" என போலீஸ் கமிஷனர் மீனாக்ஷி கட்டடையான் தெரிவித்தார்.