
தமிழகத்தில் மது, கஞ்சா, போதை கலாசாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, தொடர்ந்து நடக்கின்றன. லஞ்சம், ஊழல் காரணமாக எந்த வகையிலும், தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழல் நிலவுகிறதுதமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்துமுடிவடையும் தருவாயில் உள்ளது., ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளை திமுக பிரமுகர்கள் மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே வீடியோ ஆடியோக்கள்வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரிகள் என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களின் கதையை முடித்து விடுவேன், அவர்கள் இனி இருக்க மாட்டார்கள் என திமுக மாவட்டச் செயலாளர்களை வைத்து மிரட்டுவது தான் திராவிட மாடலா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ திமுக அரசின் தோலை உரித்து காட்டியுள்ளது. நைனார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் ஆடியோ வெளியிட்டு ஓர் பதிவை செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது; கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு!சென்னை புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து லஞ்சம் வராததால், உதவிப் பொறியாளருக்குத் திமுக வட்டச் செயலாளர்கள் இருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என அரசுப் பணியாளரை மிரட்டியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. மேலும், இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால் "அமைச்சரை வைத்து நோண்டிவிடுவோம்" என்றும் "மெட்ரோ வாட்டரை நாசம் செய்துவிடுவேன்" என்றும் தரக்குறைவாகப் பகிரங்கமாக அச்சுறுத்துவது திமுகவினரின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு புறம் மக்களுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் கோபாலபுரத்தின் புகழை மட்டும் பாடும் திமுக அமைச்சர்கள், மறுபுறம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் அரசுப் பணியாளர்களை அச்சுறுத்தி பணியை நிறுத்தி லஞ்சம், கமிஷன் என மக்களின் பணத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்ச திட்டமிடும் திமுக உடன்பிறப்புகள். இப்படி ஓரணியில் திரண்டு தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து!
