24 special

சீனாவின் வான்பாதுகாப்பை உடைத்த இந்தியா! சீனா வெறும் காகிதப் புலி உலகை அதிர வைத்த ஆஸ்திரேலிய அறிக்கை

PMMODI,XIJINPING
PMMODI,XIJINPING

பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வீரத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மகத்தான உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு அளித்திருக்கும் முக்கியத்துவம், இந்திய இராணுவத்தின் நிகரற்ற வீரம் மற்றும் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு ரகசியம் வெளியாகி உள்ளது! 


ஒரு காலத்தில் 'வெல்ல முடியாதது' என்று சீனா அகந்தையுடன் கூறிக்கொண்டிருந்த வான்பாதுகாப்பு அரணை, நம் இந்தியப் படைகள் 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் ஊடுருவி, சீனா தயாரிப்பு என்றாலே டம்மி என நிரூபித்துள்ளது. . இது ஏதோ சாதாரண விஷயம்  அல்ல, இது உலகின் வல்லரசு எனச் சொல்லிக்கொள்ளும் சீனாவின் தொழில்நுட்ப முகத்திரையைக் கிழித்தெறிந்த முக்கிய திருப்பு முனை ஆகும்!

நம் அண்டை நாடான பாகிஸ்தான், இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து, சீனாவின் மிக அதிநவீன PL-15E ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது  . ஆனால், நம் இந்திய ராணுவம் விரைந்து செயல்பட்டு, அந்த ஏவுகணைகள் நம் மண்ணைத் தொடும் முன்பே அவற்றை விண்ணிலேயே இடைமறித்துத் துண்டு துண்டாக்கினர். இது நமது விமானப் படை வீரர்களின் தீரத்தையும், இந்தியாவின் பராக்-8 போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகளின் அசாத்திய வலிமையையும் காட்டியது.

இதில் மேலும் ஒரு சுவாரசியம் என்னவென்றால், பாகிஸ்தானின் JF-17 போர் விமானம் மூலம் ஏவப்பட்ட ஒரு சீன ஏவுகணை வெடிக்காமல் பஞ்சாபில் மீட்கப்பட்டது. அந்த ஏவுகணையில், தோல்வியடைந்தால் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் (Self-Destruct) தொழில்நுட்பத்தை சீனா சேர்க்கவில்லை என்பது இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் விளைவாக, இந்திய விஞ்ஞானிகள் சீனாவின் ஒட்டுமொத்த ஏவுகணை தொழில்நுட்பத்தையும் ஆராய்ந்து,  'ரிவர்ஸ் என்ஜினீயரிங்' திட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். எதிரியின் ஆயுதத்தின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பு, பிரதமர் மோடி அரசின் தொலைநோக்கு பார்வையால் பாதுகாப்புத் துறையில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.

சீனா, தான் தயாரித்த ரேடார்களும், HQ-9BE, HQ-16FE போன்ற ஏவுகணை எதிர்ப்புச் சாதனங்களும் இந்தியாவின் ரஃபேல் மற்றும் பிரம்மோஸ் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும் என்று பாகிஸ்தானுக்கு உத்தரவாதம் அளித்து, பெரும் தொகையைப் பெற்று அவற்றைப் சீனா விற்றது. ஆனால், களத்தில் நடந்ததோ வேறு! ஆப்ரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் குறைந்த உயரத்தில் பறக்கும் 'ஸ்கால்ப் குரூஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் அதிநவீன ரேடார்களின் கண்களில் படாமல், எதிரி நாட்டின் கோட்டைகளுக்குள் புகுந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட சீனாவின் YL-8E ரேடார்கள் கூட, இந்த இந்திய ஏவுகணைகளைக் கண்டறியவோ, தடுக்கவோ முடியாமல் தோல்வியை தழுவின. 

'2025 துணைக் கண்ட மோதலில் வான் மற்றும் ஏவுகணைப் போர்: கண்காணிப்பு மற்றும் விளைவுகள்' என்ற தலைப்பில் ஆஸ்திரேலியா வெளியிட்டிருக்கும் அறிக்கை, இந்த உண்மைகளை இன்று உலகறியச் செய்திருக்கிறது. இந்த அறிக்கை, சீன தொழில்நுட்பம் என்பது வெறும் காகிதப் புலிதான் என்றும், இந்திய இராணுவத்தின் மின்னணு போர் அமைப்புதான் உலகின் மிகச்சிறந்த ஒன்று என்றும் உறுதிப்படுத்தியுள்ளது., இந்தியாவின் பாதுகாப்பு அரண் தான் மிகவும் வலிமையானது என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிரூபித்திருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு தேசப்பற்று மிக்க செய்தியாகும். நமது ராணுவ வீரர்கள் நம் தேசத்தைப் பாதுகாக்க வானிலும், தரையிலும், கடலிலும் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்!