24 special

DRDO வின் அடுத்த அதிரடி..! லைட் வெயிட் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரிப்பு..!

DRDO
DRDO

புதுதில்லி : நமது ராணுவ வீரர்கள் இதுவரை கடினமான எடைமிகுந்த ஜாக்கெட்டுகளையே பயன்படுத்திவருகின்றனர். கெவ்லர் ரக துணிகளில் பயனப்டுத்தப்படும் பிளேட்டுகளின் எடையோடு சேர்த்து ஜாக்கெட்டின் எடை மட்டுமே ஐந்து கிலோ. அது தவிர மேகஸின்கள் துப்பாக்கிகள் ரவைகள், உணவு மற்றும் நீர் ஆயுதங்கள் குண்டுகள் என வீரர்கள் சுமக்கும் மொத்த எடை 80 முதல் 90 கிலோ ஆகும். மற்றவற்றின் குறிப்பாக துப்பாக்கிகளின் எடையை குறைக்க பாதுகாப்புத்துறை முடிவெடுத்துள்ள அதேநேரத்தில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளின் எடையை குறைக்கவும் DRDO நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகமான DRDO ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து உலகின் மிக எடைகுறைந்த குண்டு துளைக்காத உடையை தயாரிக்கவிருக்கிறது. இதுகுறித்து DRDO தலைவர் ஒரு திறப்புவிழாவில் தெரிவித்தார். சென்னை வர்த்தக மையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டிபன்ஸ் அண்ட் டெக்னலாஜி எக்ஸ்போ எம்.எஸ்.எம்.இ விழாவில் பேசிய DRDO தலைவர் சதீஸ் ரெட்டி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது "DRDO  ஆராய்ச்சிநிறுவனத்தில் (R &D ) பத்து சிறந்த மையங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு DIACOE என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இருந்து உலகின் மிக எடைகுறைவான குண்டுதுளைக்காத உடை தயாரிக்கப்பட உள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்காலத்தேவையை கருத்தில்கொண்டு மிகமுக்கியமான தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது. 

இந்த திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசத்திலுள்ள மையங்களில் தயாராக உள்ளது. மேலும் ற்பாதுகாப்பு துறைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்திருப்பதால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும். இந்திய அரசு பல புதிய துறைகளை தனியாருக்கு திறந்துவிட்டுள்ளது. 

இதனால் ஏவுகணைகள் வெடிகுண்டுகள், ராடார்கள், பீரங்கி குண்டுகள், துப்பாக்கிகள் என அனைத்தும் உள்நாட்டிலேயே தாயரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 75 தனியார் நிறுவனங்கள் DRDO வுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதிலிருந்து மாறி ஏற்றுமதி செய்யும் நிலைக்கு செல்வதே நமது லட்சியம்" என DRDO தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.