24 special

DSP சுந்தரேசன் விவகாரம்...அடுத்தடுத்து நடந்த காவல்துறை ரகசிய மீட்டிங்...அதிர்ந்த அறிவாலயம் ... ஆடிப்போன அதிகாரிகள்!

DSPSUNDARESAN,ARIVALAYAM
DSPSUNDARESAN,ARIVALAYAM

திமுக ஆட்சிக்கு, ஓர் இக்கட்டான சூழல் வருமென்றால், அது பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு தான் இருக்கும். மேலும், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமென, மூன்று அதிகாரிகள் அவரை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தியதுண்டு. அதே போன்ற சந்திப்புகளும் ஆலோசனைகளும் மெல்ல மெல்ல இப்போதைய எதிர்க்கட்சியிடமும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. ‘தி.மு.க ஆட்சி பறிபோக வேண்டும்’ என்ற எண்ணத்தைவிட, ஆட்டம் போடும் அதிகாரிகள்மீதான வெறுப்புதான், சில உயரதிகாரிகளை எதிர்க்கட்சியை நோக்கி நகர்த்தியிருக்கிறது


இதற்கு காரணம் சட்டம்-ஒழுங்கு, காவல் மரணங்கள், உளவுத்துறை தோல்வி...’ எனக் காவல்துறை மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில்... சமீபத்தில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன், ‘காவல்துறையில் நிலவும் அதிகாரத் தரப்பின் ஆட்டங்கள்’ குறித்து பொதுவெளியில் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், ஒட்டுமொத்த காவல்துறைக்குள்ளும் பூகம்பத்தையே உருவாக்கியிருக்கின்றன!

“சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதமும், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலனும் என்னைத் தொடர்ந்து பழிவாங்குகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்துக்குப் பாதுகாப்பு இல்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன்...” எனத் தன் உயரதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார் சுந்தரேசன். இதற்கு முன்பாக, டி.எஸ்.பி அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் யாரும் இப்படி உயரதிகாரிகள் குறித்துப் பொதுவெளியில் வெடித்ததில்லை.

டி.எஸ்.பிசுந்தரேசன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், உயரதிகாரிகள்மீது அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை யாரும் மறுக்கவில்லை. காவல்துறை மேலிடத்திலேயே மெளனம்தான் நிலவுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவின் டி.எஸ்.பி-யாக இருந்த சுந்தரேசன், சமீபத்தில் மீடியாக்களிடம் பேட்டியளித்தார் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் கொடுக்கும் அழுத்தத்தில் என்னை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் பழிவாங்குகிறார்” என்றார். இந்த விவகாரம் பூதாகரமானதும், டி.எஸ்.பி சுந்தரேசனைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு. அத்துடன், ‘உயரதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மயிலாடுதுறையைவிட்டு வெளியே செல்லக் கூடாது’ எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.  டி.எஸ்.பிசுந்தேரேசன் மீதான புகார்கள் குறித்து விசாரித்த டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், என்னிடம் விசாரணை நடத்தாமலேயே சஸ்பெண்ட் செய்வதற்குப் பரிந்துரை செய்தார். அரசும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

மேலும் டி.எஸ்.பிசுந்தரேசன் குறி வைத்த காரணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரதொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.எஸ்.பிசுந்தரேசன் காஞ்சிபுரத்தில் இருந்த பணியாற்றியபோது செங்கல்பட்டில் நடந்த ஒரு வழக்கு தொடர்பாக போலீஸாருக்குச் சாதகமாக அறிக்கையைத் தரும்படி மேலிடம் கூறியுள்ளது. . ‘உண்மையை மறைக்கச் சொல்றீங்களா... முடியாது சார்..!’ என்று சுந்தரேசன் சொல்லவும், ‘பின்னாடி வர்ற விளைவுகளையெல்லாம் நீங்க நினைச்சுப் பார்க்க வேண்டாமா..?’ என மிரட்டியுள்ளது மேலிடம்.காவல்துறை  கேட்டபடி அறிக்கையைக் கொடுக்கவேண்டியதுதானே... அதுல ஏன் பிரச்னை பண்றீங்க..?’ என உயரதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  அத்தனை மிரட்டல்களுக்குப் பிறகும், போலீஸ் விசாரணையில் இருவர் தாக்கப்பட்டதாகத்தான் அறிக்கை கொடுத்திருக்கிறார் சுந்தரேசன். அதில், ஏ.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி-க்கள், எஸ்.ஐ உட்பட எட்டு போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார். அப்போதே, சுந்தரேசனுக்குக் குறிவைத்துவிட்டனர்.சில சுயநல போலீஸ் உயரதிகாரிகளால், நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் மீது, “எல்லோரையும் ஒருமையில் திட்டுகிறார். சமூகரீதியாகப் பாகுபாடு காட்டுகிறார். தனக்குப் பிடிக்காத அதிகாரிகளைப் பழிவாங்குகிறார்...” என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே ‘ஈகோ’ மோதல் தொடர்வதால், டேவிட்சன் மீது புகார்கள் எழும்போது, அவையெல்லாம் தமிழ் அதிகாரிகள்மீது நடத்தப்படும் தாக்குதல் என  சித்தரிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் தமிழ் அதிகாரியான டி.எஸ்.பி சுந்தரேசனே டேவிட்சனுக்கு எதிராகக் கொதித்தெழவும்தான், விவகாரம் சூடாகியிருக்கிறது.

, “தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், உளவுத்துறைக்கு ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சனை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அன்றிலிருந்து இன்று வரையில், தமிழக காவல்துறையை மொத்தமாக நகர்த்துவதே டேவிட்சன்தான். என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. டேவிட்சன் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் குவிகின்றனவோ, அதே அளவுக்கு உளவுத்துறை ஐ.ஜி-யான செந்தில்வேலன் மீதும் குற்றச்சாட்டுகள் குவிகின்றன.