24 special

தேதி குறித்தார் ஓபிஎஸ்.....கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு எதிராக புதிய திட்டம்!

ops, eps
ops, eps

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலங்களே உள்ள நிலையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாநாடு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டார். அதிமுகவில் ஓபிஎஸ்  துணைத்தலைவராக செலயல்பட்டு வந்தார். எடப்பாடிக்கும், பன்னீர்செல்வம் இடையே கருத்துவேறுபாடு காரணமாக ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி. அதன் பின் தனித்து வந்த ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது. 

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூடத்தில் அடுத்த ஆண்டு முதல் மாதம் ஜனவரி 6ம் தேதி கோவையில் ஓபிஎஸ் அணியின் சார்பாக மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மேலும் அதிமுக 52வது தொடக்க நாளை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறத என்று கூறினார். முன்னதாக திருச்சியில் மாநாடு நடத்திய ஓபிஎஸ், அடுத்து காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது மழை பெய்ததால் அந்தப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தற்கு பின்னர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது "நாங்கள்தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து பேசவில்லை” என தெரிவித்தார்.

எடப்பாடியின் கோட்டையில் ஓபிஎஸ் மாநாடு நடத்துவதால் எடப்பாடி அணியினருக்கு சற்று கலக்கத்தை கொடுத்துள்ளது. அதாவது அதிமுக, பாஜகவில் கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் மத்திய அமைச்சர் சீதாராமனை அதிமுக கொங்கு மண்டல எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அதன் பின், ஓபிஎஸ் தரப்பினர் பாஜகவில் இணைந்தால் இரட்டை இழை ஓபிஎஸ் பக்கம் தான் செல்லும் இதனால் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் எடப்பாடி தரப்பினர். 

இதற்கிடையில் நேற்று சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்க சொல்லி பல முறை மனு கொடுத்ததும் கண்டுகொள்ளவில்லை என்றுகூறி இபிஎஸ் தரப்பினர் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தினாலும். இதன் மூலம் அதிமுக கட்சி ஓபிஎஸ் பக்கம் சேலை வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகின. மேலும், ஜனவரியில் நடக்க இருக்கும் மாநாடு திருப்பு முனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பது உறுதியானால் அதிமுக முழுவதும் ஓபிஎஸ் இடம் வசமாகும் எனபது குறிப்பிடத்தக்கது.