
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் உள்ள சைவ மடமான தர்மபுரி ஆதீனமடம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்று! இந்த மடாலயத்தில் 27ஆவது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பொறுப்பாளராக உள்ளார். இவர் குறித்த பரபரப்பான தகவல்கள் சமீபத்தில் வெளியாகி அதற்கு ஆதீனத்திற்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்ததற்கு தர்மபுரி ஆதீன குரு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். அதாவது தன்னை குறித்த ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்கள் இருப்பதாக கூறி சிலர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஆதீன கர்த்தரின் சகோதரரும் உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் நிர்வாக பொறுப்பில் இருந்து வருகின்ற விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரே ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகம் ஆதின சகோதரர் கொடுத்த புகார் அடிப்படையில் வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் என்ற ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவரில் அகோரம் என்பவர் பாஜக நிர்வாகி என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தன்னை மிரட்டுவதாக ஆதீன கர்த்தர் தரப்பில் அவரது சகோதரர் அளித்த புகாரை ஏற்று அதில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தர்மபுரி ஆதீனம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த சில நாட்களாக தர்மபுரி மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப் களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும் மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளனர் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் காவல்துறையை நாடினோம் காவல்துறை மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகச்சரிதமான சட்டப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளது எனவே மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தில் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தர்மபுரி மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று சரி இல்லாதது போன்று தோன்றுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தர்மபுரி பட்டினப்பிரவேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எடுத்தபொழுது அதற்கு ஆதரவாகத் துணையின்றது தமிழக பாஜக அதற்குப் பிறகே திமுக அரசும் இதற்கு ஆதரவளித்தது அப்படி இருக்கும் பொழுது இந்த விவகாரத்தில் பாஜகவை தேவையில்லாமல் இழுத்து இருப்பார்களோ என்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் உலா வந்தது.இந்த நிலையில், நேதாஜி மக்கள் கட்சி நிறுவனரும் அரசியல் விமசகருமான வரதராஜன், தர்மபுரி ஆதீனத்தை எப்படி ஸ்டாலின் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றினார்! ஏதோ உள்ளே இருக்கிறது என்று விசாரித்த பொழுது அவர் சொல்கிறார்.
அவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ இருந்ததாம்! அதனை வெளியிடுவேன் என்று பாஜகவினர் மிரட்டினார்களாம், ஆனால் ஆதீனங்களுடன் அதிக நெருக்கமாக இருப்பவர்கள் பாஜகவினர் அவர்கள் எப்படி ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி இருப்பார்கள்! என்ற சந்தேகமும் வந்தது அதற்கு பிறகு தான் தெரிகிறது ஆபாச டிவி வெளியிடுவதில் மிக கை தேர்ந்த வல்லுனர்கள் திமுகவினர்தான்! ஏனென்றால் நித்தியானந்தனின் ஆபாச வீடியோவை வெளியிட்டது அவர்களது தொலைக்காட்சிதான், ஒரு நடிகை குறித்த ஆபாச விஷயங்களை பேசியதும் அவர்களது தொலைக்காட்சி தான்! மத்திய அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோவை வைத்து அவரை மிரட்டினார்கள் ஆகவே ஆபாச வீடியோக்கள் திமுகவிற்கும் தான் எப்பொழுதுமே தொடர்பு இருக்கிறது. மேலும் இதில் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது என்று பார்த்தால், ஆபாச வீடியோவால் ஆதீனம் முதல்வர் ஸ்டாலினிடமாட்டிக் கொண்டு இந்த வீடியோ வெளியாகாமல் இருக்க வேண்டுமென்றால் பாஜக தான் இப்படி ஒரு மிரட்டலை விடுத்து வருவதாக புகார் அளித்து அறிக்கை விட வேண்டும் என்று முதல்வர் மிரட்டி இருப்பார் என்ற சந்தேகமே எங்கள் அனைவருக்கும் எழுகிறது என்று கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.