நாளுக்கு நாள் தமிழக அரசியல் இப்போது அண்ணாமலையை சுற்றியே நடக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது, ஒரு பக்கம் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், மறுபக்கம் அண்ணாமலையை தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவரும் அமைச்சர்கள்.
ஆளும் கட்சியான திமுக செயற்குழு கூட்டத்தில் கூட மதவாத சக்திகள் முயற்சியை முறியடிப்போம் என மறைமுகமாக பாஜகவை நோக்கி தீர்மானம், எப்போதும் திமுக அதிமுகவை அதிகம் தாக்கியே தீர்மானம் நிறைவேற்றும் இந்த சூழலில் அண்ணாமலை நேற்றைய தினம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சி பூர்த்தி செய்ததை தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
From hopelessness to Hope ,From parochial mindset to Nation First, From dilly dallying to Conviction ,From one sided to Holistic Development , From a pariah to a ViswaGuru, From Dark to Light
8 years & counting with Shri @narendramodi avl as our first servant என ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார். இதில் pariah என்ற தவறான அர்த்தம் உடையது என விசிகவை சேர்ந்த வன்னியரசு அண்ணாமலைக்கு எதிராக ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார், எச்சரிக்கைபாப்பானுக்கே மூப்பான் பறையன்,கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி.சனாதனத்தை-வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான்.
உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும் வாழ்க வளமுடன் என குறிப்பிட்டு கீழே அண்ணாமலை குறிப்பிட்டு இருந்த pariah என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும் இணைத்து இருந்தார்.
அண்ணாமலை தெரிவித்த வார்த்தையை வைத்து புது பிரச்னையை கிளப்பலாம் என்று இருந்த வன்னியரசிற்கு கத்தியை விட புத்தி கூர்மையானது என குறிப்பிட்டு ஒரு ஆங்கில அகராதியை வாங்கி அனுப்புகிறேன் என கூறி மூக்கை உடைத்து இருக்கிறார் அண்ணாமலை.