புதுதில்லி : இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் நமது பாதுகாப்புக்கான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிபந்தனைகளுடன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் இறக்குமதி அல்லது உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவிகதம் பங்கு என்ற நிபந்தனை முறையில் செயல்பட்டு வருகிறது. இது தொழிநுட்பரீதியில் ஆப்செட் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சகம் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சோ காஸ் நோட்டீஸ் அனுப்பியிருப்பதுடன் எச்சரிக்கை அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இதனால் சில நிறுவனங்கள் பதறிப்போய் தங்களது CEOக்களை அனுப்பிவருகின்றனர்.இதனிடையே பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தரப்பில் பல செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்திய ராணுவத்தின் பெரிய பெரிய ஒப்பந்தங்களை பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பாதுகாப்பு துறை மற்றும் விண்வெளித்துறையில் கட்டயாமாக 30 சதவிகதம் முதலீடு செய்யவேண்டும். ஆனால் அதை தவிர்த்தது மட்டுமல்லாமல் இதுவரை சில நிறுவனங்கள் ஒப்பந்தத்தை மீறியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அமைச்சகம் அந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனங்கள் இந்திய உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை என தெரிகிறது. ஒப்பந்த விதிகளை மீறியதால் அந்த நிறுவனங்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புத்துறை அமைச்சக தரவுகளின்படி கடந்த ஐந்தாண்டுகளில் இந்த நிறுவனங்கள் 2.24 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கவேண்டும்.
மேலும் சில சலுகைகளும் கால நீட்டிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிறுவனங்களுக்கெல்லாம் அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் ஒப்பந்தங்களை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக அந்நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் உதிரி மற்றும் உபகாரணங்களுக்கான விலையில் அவர்களின் அபராத தொகையை கழிக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தை மீறிய நிறுவனங்கள் மீது 43.14 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இந்த அபராத தொகை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.